பெண்கள் கழிவறைக்கு சென்ற பேராசிரியர் - வெளுத்தெடுத்த பேராசிரியைகள்
குடிபோதையில் பெண் பேராசிரியைகளின் கழிவறைக்கு சென்ற பேராசிரியரை பேராசிரியைகள் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி டவுனில் அரசு சர்தார் பி.யூ. கல்லூரி இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரியில் அமித் பசவமூர்த்தி என்பவர் ஆங்கில பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு மது அருந்திவிட்டு வந்து மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
குடித்துவிட்டு வருவது மட்டுமின்றி அங்கு பணிபுரியும் பெண் பேராசிரியைகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வார் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டாலும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
மேலும் படிக்க | தில்லியில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் மீது தாக்குதல்; 9 பேர் கைது
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அமித் பசவமூர்த்தி குடித்துவிட்டு பெண்கள் கழிவறைக்குள் சென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி, கழிவறைக்குள் மறைந்திருந்து, பெண்களிடம் தகாத முறையிலும் நடந்துகொண்டார்.
இதனால் அங்கிருந்த பெண் பேராசிரியைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமித்தை செருப்பால் அடித்துள்ளனர் இதை யாரோ சிலர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மீண்டும் எகிறும் கொரோனா எண்ணிக்கை, பாசிடிவ் விகிதம் 5% தாண்டியது
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR