டெல்லி: ஊடகங்களிடமிருந்து விலகி இருக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பிப்ரவரி 2 ம் தேதி வெளியிடப்பட்ட தனது உள் சுற்றறிக்கையில், ஊழியர்கள் ஊடகங்களுடன் அதிக நெருக்கமாக இருக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தகவல் கசிவு ஏற்படுவதை தடுக்க ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று நம்பப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுற்றறிக்கை வெளியிடுவதற்கான காரணம் என்ன


 தவறான செய்திகள் பரவுவதை தவிர்ப்பதற்காக ரிசர்வ் வங்கி (RBI) இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உண்மையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பல வகையான கூட்டங்களில் கலந்துகொண்டு பின்னர் பத்திரிகைகளின் முன் அறிக்கைகளை வழங்குகிறார்கள். அவரது அறிக்கை ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ அறிக்கையாக கருதப்படுகிறது, பின்னர் ரிசர்வ் வங்கி இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்ற நிலை உருவாகிறது. இந்த சூழ்நிலையைத் தவிர்க்க ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை வழங்கியுள்ளது என்று நம்பப்படுகிறது.


சில நாட்களுக்கு முன்பு பரவிய வதந்தி


சில நாட்களுக்கு முன்பு 5, 10 மற்றும் 100 ரூபாய் பழைய தொடர் நோட்டுகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது, ஆனால் பழைய நோட்டுகளை திரும்பப் பெறுவது தொடர்பான அறிக்கைகளை ரிசர்வ் வங்கி மறுத்தது. ரிசர்வ் வங்கி ஒரு ட்வீட்டில், ஊடகங்களின் சில பிரிவுகளில் பழைய தொடர் 100 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் விரைவில்  நிறுத்தப்படும் என்று தகவல்கள் வந்துள்ளன. அவை முற்றிலும் தவறானவை என அறிவித்தது.


அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஊடகங்களுடன் பேசுவார்கள்


ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை கடைபிடித்து, எந்த சூழ்நிலையிலும் ஊடகங்களுடன் பேச வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் எந்தவொரு விஷயமானாலும், ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ அறிக்கை குறித்து தங்கள் HOD மற்றும் பிராந்திய இயக்குநர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி தனது அதிகாரிகள் ஊடகங்களுடன் தொடர்புகொள்வதைத் தடுக்க முறையான சுற்றறிக்கை வெளியிடுவது இதுவே முதல் முறை.


ALSO READ | 'Made in India' கோவிட் -19 தடுப்பூசிக்காக  25 நாடுகள் காத்திருக்கின்றன: S.ஜெய்சங்கர்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR