கொரோனா வைரஸ் பீதி! காசி விஸ்வநாதர் சிவனிற்கு முகமூடி!!
கோவிலில் பூசாரி மற்றும் பக்தர்கள் முகமூடி அணிந்து பிரார்த்தனை செய்வதைக் காண முடிந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படும் நேரத்தில், இந்தியாவில் உள்ள ஒரு கோவிலின் பூசாரி அங்குள்ள தெய்வங்களுக்கு முகமூடி போட்டு, விக்கிரகங்களைத் தொடக்கூடாது என்று பக்தர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சுவாமி விஸ்வநாதருக்கும் முகமூடி போட்டுள்ளோம். குளிர்ச்சியாக இருக்கும்போது சிலைகளை துணி வைத்து போத்துவதும், சூடாக இருக்கும்போது ஏ.சி.க்கள் அல்லது கூலர்கள் வைப்பது போலவும், தெய்வங்களுக்கு தற்போது முகமூடி வைத்துள்ளோம்,” கோயில் பூசாரி கிருஷ்ணா ஆனந்த் பாண்டே திங்கள்கிழமை தெரிவித்தார்.
மேலும் "கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சிலையைத் தொடக்கூடாது" என்று பூசாரி மக்களையும் வலியுறுத்தினார்.
“வைரஸ் பரவாமல் தடுக்க சிலைகளைத் தொடக்கூடாது என்று நாங்கள் மக்களை கேட்டுக்கொள்கிறோம். மக்கள் சிலையைத் தொட்டால், வைரஸ் பரவும் அபாயம் அதிகளவில் ஏறப்படலாம்”என்று அவர் கூறினார்.
இதனால் கோவிலில் பூசாரி மற்றும் பக்தர்கள் முகமூடி அணிந்து பிரார்த்தனை செய்வதைக் காண முடிந்தது.