கொரோனாவினால் பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ .50,000 வழங்குவதற்கான மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் திங்களன்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது, மேலும் உதவித் தொகைக்காக விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பணத்தை செலுத்துமாறு, மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் கூறிய உச்ச நீதிமன்றம், இது தொடர்பான தகவல்களை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீதிபதி எம்ஆர். ஷா தலைமையிலான நீதிமன்ற பிரிவு, இறப்பு சான்றிதழில் இறப்புக்கான காரணம் COVID-19 என குறிப்பிடவில்லை என்பதற்காக, எந்த மாநில அரசும் ரூ .50,000 உதவித் தொகையை மறுக்கக் கூடாது என்றும், மாவட்ட அதிகாரிகள் இறப்புக்கான காரணத்தை சரியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியது.


நீதிபதி ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான நீதிமன்ற பிரிவும், தீர்ப்பு தேதிக்குப் பிறகு நிகழும் இறப்புகளுக்கும் உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.இதற்காக குறை தீர்ப்பு குழு அமைக்கப்பட்டு இறந்த நோயாளியின் மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்து இழப்பீடு குறித்து 30 நாட்களுக்குள் முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


ALSO READ | அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பீதியில் பெற்றோர்


இறப்புச் சான்றிதழ்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், கொரோனாவினால் இறந்த, ஆனால், இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்படாத , குடும்ப உறுப்பினர்கள் குறை தீர் குழுவை அணுகி சான்றிதழில் மாற்றம் கோரும் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.


உச்சநீதிமன்றம் இந்த ரூ .50,000 உதவித்தொகை, பல்வேறு நற்பணித் திட்டங்களின் கீழ் மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் செலுத்தும் தொகையை தவிர கூடுதலான தொகையாக இருக்கும் என்று கூறியது.


முன்னதாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ICMR வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, கொரோனா வைரஸ் (Corona Virus) காரணமாக இறந்ததாக வழங்கப்பட்ட சான்றிதழின் அடிப்படையில், நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசாங்கம் தெரிவித்தது. மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் (SDRF) இருந்து இதை மாநில அரசுகள் இதனை வழங்கும்.


ALSO READ | இந்தியாவின் கடும் கண்டனத்தை அடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அங்கீகாரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR