உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டுபாடுகள் நீக்கம்: மத்திய அரசு
பண்டிகை காலத்தில் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு நற்செய்தியாக, வரும் 18ம் தேதி முதல் 100% பயணிகளுடன் உள்நாட்டு விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (The Union Ministry of Civil Aviation) செவ்வாய்க்கிழமை உள்நாட்டு விமானங்கள் குறித்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. கொரோனா பரவலை (Coronavirus) தொடர்ந்து, நீண்ட காலமாக 85 சதவிகித பயணிகளுடன் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், இப்போது அக்டோபர் 18 முதல் 100% பயணிகளுடன் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கை
இது தொடர்பாக அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில், உள்நாட்டு விமான போக்குவரத்தை இயக்குவது தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது பயணிகள் முன்பு போல் 100% அளவில் பயணம் செய்ய முடியும். பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பால் விமான நிறுவனங்கள் பயனடையும் அதே வேளையில், பண்டிகை காலத்தின் போது, சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ALSO READ | தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி விரைவில்?
ஊரடங்குக்குப் பிறகு தொடங்கிய உள்நாட்டு விமானம் போக்குவரத்து
குறிப்பிடத்தக்க வகையில், கோவிட் -19 லாக்டவுன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்து சேவை இயக்கப்படாத நிலையில், பின்னர், உள்நாட்டு பயணிகள் விமான சேவை, மே 25 முதல் மீண்டும் தொடங்கப்பட்டன. இதற்கு முன்னதாக விமானங்கள் முன்பு 85% பயணிகளுடன் இயக்க அனுமதிக்கப்பட்டது. முன்னதாக, ஜூன் 26 அன்று அரசு 33% லிருந்து 45% பயணிகள் ஆகவும், பின்னர் செப்டம்பர் 2 ம் தேதி இந்த அளவை 60% ஆகவும் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | அடுத்த 3 மாதங்களுக்கு கவனம் தேவை: எச்சரிக்கும் சுகாதாரச் செயலர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR