புதுடெல்லி: அக்டோபர் மாதத்தில் கொரோனா நோய்த்தொற்றினுடைய மூன்றாவது அலையின் தாக்கம் உச்சகட்டத்தில் இருக்கும் என்று உள்துறை அமைச்சக நிபுணர் குழு பிரதமர் அலுவலகத்தை (PMO) எச்சரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உள்துறை அமைச்சகத்தால் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (NIDM) கீழ் அமைக்கப்பட்ட நிபுணர்களின் குழு, கோவிட் -19-ன் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும், என்றும், பெரியவர்களைப் போல, குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படக்கூடிய அதிக சாத்தியக்கூறுகள் உள்ளது என்றும் மேலும் கூறியுள்ளது.


இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க நாடு முழுவதும் உள்ள குழந்தை மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை என்பதை எடுத்துக்காட்டிய நிபுணர் குழு, மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்கவும், சுகாதார வசதிகளை அதிகரிக்கவும் அழைப்பு விடுத்துள்ளது.


PMO-வுக்கு அளித்துள்ள அறிக்கையில், மருத்துவ வசதிகள் இல்லாமை, மருத்துவர்கள், ஊழியர்கள் ஆகியோரின் பற்றாக்குறை, வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் போன்ற உபகரணங்களின் பற்றாக்குறை பற்றி குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊடக அறிக்கையின்படி, தற்போதுள்ள மருத்துவ வசதிகள், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், அதை சமாளிக்கும் வகையில் இல்லை என்று அந்த குழு கூறியுள்ளது.


ALSO READ: Fake Vaccine: உத்திரபிரதேசத்தில் போலி தடுப்பூசி மையம் நடத்திய இருவர் கைது.!!


"மூன்றாம் அலை தயார்நிலை: குழந்தைகள் பாதிப்பு மற்றும் மீட்பு" என்ற தலைப்பில் உள்ள அறிக்கை, மூன்றாம் அலை குழந்தைகளை பாதிக்கும் சாத்தியக்கூறுகளையும் தொற்றுநோயை சமாளிக்க தேவையான உத்திகளையும் பற்றி கூறப்பட்டுள்ளது.


வல்லுநர் குழு அறிக்கை, இணை நோய்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை வலியுறுத்துகிறது. பல தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையிலும், அக்டோபர் மாத இறுதியில் COVID மூன்றாவது அலை உச்சத்தை அடையக்கூடும் என்று அறிக்கை எச்சரிக்கிறது.


பிரதமர் மோடியின் (PM Modi) கோவிட் மேலாண்மை குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் வி.கே.பால், கோவிட் மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று முன்பு கூறியிருந்தார்.


குழந்தைகளைக் காக்க பெரியவர்கள் தடுப்பூசியை (Vaccination) செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். சாத்தியமான மூன்றாவது அலை பற்றிய கேள்விக்கு பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர், கோவிட் -19 இன் சாத்தியமான மூன்றாவது அலைகளைச் சமாளிக்க மத்திய அரசு முழுமையாக தயாராக உள்ளது என்றார்.


இதற்காக ரூ .23,123 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மூன்றாம் அலை மற்றவர்களை விட குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் குழந்தை பராமரிப்பை வலுப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று தாக்கூர் தெரிவித்தார்.


ALSO READ: WHO: இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டது; உலக சுகாதார மையம் எச்சரிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR