கொரோனா வைரஸுக்கு எதிரான போரில், தடுப்பூசி ஒன்றே அதை ஒழிக்கும் ஆயுதமாக உள்ள நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுடன் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. மேலும் இரு தினங்களுக்கு முன், இந்திய மருந்து நிறுவனமான ஜைடஸ் கெடிலாவின் (Zydus Cadila) தடுப்பூசியான ஜிகோவ்-டிக்கு (Zycov-D) அரசாங்கத்தின் அவசர ஒப்புதல் கிடைத்துள்ளது. இது DNA அடிப்படையிலான உலகின் முதல் தடுப்பூசி இதுவாகும்.
இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் போலி தடுப்பூசி மையம் நடத்தி வந்த 2 நபர்களை அங்குள்ள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
"டாக்டர் சுனில் குமார் என்பவர் "பாரபங்கி மாவட்டம் ஜாயித்பூர் பகுதியில் ஒரு சிலர் சட்டவிரோதமாக தடுப்பூசி மையம் நடத்தி வருவதாக கண்டறிந்துள்ளார்..இந்த மையம் கொரோனா (Corona)தடுப்பூசி போடுவதற்காக திடீரென திறக்கப்பட்டது குறித்து அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.இதனடிப்படையில் காவல் நிலையத்திற்கு சென்று அவர் புகார் அளித்துள்ளார்.
ALSO READ: COVID-19 Update: இன்று தமிழகத்தில் 1,652 பேர் பாதிப்பு, 23 பேர் உயிர் இழப்பு
இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இடத்தில் "கோவிஷீல்டு தடுப்பூசி குப்பிகளும்,போலி தடுப்பூசி அட்டைகளும் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த "போலி தடுப்பூசி மையத்தை நடத்தி வந்த பிரிஜேந்திர குமார்,சந்தீப் குமார் என்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்களில் சந்தீப் குமார் அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இதன் காரணமாக மருத்துவமனையில் உள்ள தடுப்பூசிகளை திருடி வந்து தடுப்பூசி மையத்தில் வைத்து பொது மக்களுக்கு செலுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ: WHO: இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டது; உலக சுகாதார மையம் எச்சரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR