Liquor Shop: இந்த மாநிலத்தில் நாளை முதல் மதுக்கடை திறக்க அனுமதி
கேரளாவில் நாளை முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் மதுக்கடைகள் திறக்கவும், தமிழக எல்லை வரை பஸ் இயக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
கேரளாவில் நாளை முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் மதுக்கடைகள் திறக்கவும், தமிழக எல்லை வரை பஸ் இயக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா (Corona Spread) பரவலை கட்டுபடுத்த இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக முழு ஊடரங்கை (Lockdown in Kerala) அமல்படுத்தப்பட்டது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து தமிழகம் போன்ற மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ALSO READ | New COVID-19 variant: புதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டுபிடிப்பு
அந்தவகையில் தற்போது கேரளாவில் நாளை முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஊரடங்கில் தளர்வு செய்வது குறித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது முக்கிய முடிவுக; எடுக்கபட்டது.
அதன்படி கேரளாவில் ஏப்ரல் மாதம் இறுதியில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு நாளை முதல் கூடுதல் தளர்வுகளுடன் நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் மீண்டும் அறிவிக்கப்படும் வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கும். மற்ற நாட்களில் மதுக்கடைகள், பார்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி. மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, அவரவருக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் மதுக்கடைகளுக்கு சென்று மது வாங்கி கொள்ளலாம்.
நீண்ட தூர பஸ்கள் உள்பட அனைத்து பஸ்களும் இயக்கப்படும். அதேபோல் குமரி - கேரள எல்லையான களியக்காவிளை, இஞ்சிவிளை வரை கேரள அரசு பஸ்கள் இயக்கப்படும். அனைத்து அத்தியாவசிய கடைகளும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
திருமணம், மரண நிகழ்ச்சிகளில் பங்கேற்க 20 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. நாளை முதல் அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 25 சதவீத ஊழியர்களுடன் அனைத்து நாட்களிலும் இயங்கலாம். தலைமை செயலகத்தில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம். வங்கிகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் செயல்படலாம். ஓட்டல்களில் பார்சல் அனுமதிக்கப்படுகிறது என்று கூறபட்டுள்ளது.
ALSO READ | தமிழ் ‘குடி’ மகன்களின் சாதனை: ஒரே நாளில் ₹164.87 கோடியை கடந்த மது விற்பனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR