தமிழ் ‘குடி’ மகன்களின் சாதனை: ஒரே நாளில் ₹164.87 கோடியை கடந்த மது விற்பனை

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோட், சேலம், கருர், நமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாதுதுரை ஆகிய இடங்களில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 15, 2021, 09:34 AM IST
  • தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது.
  • மது கடைகள் உட்பட பல்வேறு கடைகள் திறப்பது உட்பட பல விதமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
  • கடைகள் மூடப்பட்டதால் கோயம்புத்தூர் மண்டலத்தில் விற்பனை இல்லை.
தமிழ் ‘குடி’ மகன்களின் சாதனை: ஒரே நாளில் ₹164.87 கோடியை கடந்த மது விற்பனை title=

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட முழு ஊரடங்கு, பல தளர்வுகளுடன் ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் மது கடைகள் உட்பட பல்வேறு கடைகள் திறப்பது, இ சேவை மையங்களை இயக்குவது, வீட்டு உபயோக மின் பொருளுக்கான பழுது வேலைகளுக்கான அனுமதி உட்பட பல விதமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஊரடங்கில் தளர்வுகளில் ஒரு பகுதியாக தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை (Tasmac Shops) திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று  முதல் டாஸ்மாக் கடைகள்  திறக்கப்பட்டு, அரசு வெளியிட்டுள்ல வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விற்பனை தொடங்கப்பட்டது. 

டாஸ்மாக் வட்டாரங்கள் அளித்த தகவல்களின்படி, சென்னையில், ₹42.96 கோடி, திருச்சி மண்டலத்தில் ₹33.65 கோடி, சேலம் ₹ 38.72 கோடி  என்ற அளவில் விற்பனை பதிவு செய்துள்ளது. மதுரை பிராந்தியத்தில் .5 49.54 கோடி மதிப்புள்ள மதுபானங்களை விற்றது.

ALSO READ | Watch viral video: மதுபாட்டில்களை கும்பிட்டு குடிக்கத் தொடங்கும் மதுரை குடிமகன்

11 மாவட்டங்களில் தொற்று (Corona) பாதிப்பு அதிகம் இருந்ததன் காரணமாக மது கடைகளை திறக்க அனுமதி இல்லை. கடைகள் மூடப்பட்டதால் கோயம்புத்தூர் மண்டலத்தில் விற்பனை இல்லை. கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோட், சேலம், கருர், நமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாதுதுரை ஆகிய இடங்களில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை. 

மாநிலத்தில் உள்ள மொத்தம் 5,338 மது பான கடைகளில், 2,900 க்கும் மேற்பட்ட கடைகள் திங்களன்று மீண்டும் திறக்கப்பட்டன.

முன்னதாக, முழு ஊரடங்கு (Lockdown) காரணமாக டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், தமிழகம் முழுவதும் பல இடங்களில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகிறது என்றும், அதனால், டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக இப்படி காய்ச்சப்படும் சாராயத்தால் பலரது உயிருக்கும் ஆபத்து உள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், கள்ளச்சாராயத்தை காய்ச்சுபவர்களை பிடிப்பதில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

ALSO READ: TASMAC திறப்பு: இது தான் விடியலா.. வானதி சீனிவாசன் கேள்வி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News