தூத்துக்குடி தூப்பாக்கி சூடு பயங்கரவாதத்துக்கு உதாரணம் -ராகுல்காந்தி
ஸ்டெர்லைட் ஆலை அநீதிக்கு எதிராகப் போராடிய மக்களை துப்பாக்கி சூடு என்ற பெயரில் கொன்று குவித்துருக்கிறது தமிழக அரசு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை அநீதிக்கு எதிராகப் போராடிய மக்களை துப்பாக்கி சூடு என்ற பெயரில் கொன்று குவித்துருக்கிறது தமிழக அரசு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கள் உரிமைக்காகவும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அமைதி பேரணியாக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியாதால், போலீஸ் மற்றும் பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அது கலவரமாக மாறியதால் போலீசார் பொது மக்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினார்கள். போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட கலவரத்தில் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்ட கும்பல் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள்.
கலவரத்தை கட்டுப்படுத்த எந்தவித முன் அறிவிப்பும் இன்றி போலீசார் தூப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த தூப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கு மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் வந்துள்ளன. இச்சம்பவத்தை குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பயங்கரவாதத்துக்கு உதாரணம் தமிழக அரசு என கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய 9 பேரை போலீஸார் துப்பாக்கி சூடு என்ற பெயரில் கொன்று குவித்துருக்கிறது. தங்கள் மக்களை மாநில அரசே கொன்று குவிக்கும் செயல் பயங்கரவாதத்துக்கு உதாரணமாகும். நீதி கேட்டு, அநீதிக்கு எதிராகப் போராடிய மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். போராட்டத்தில் உயிர் இழந்த குடும்பத்தினருக்கும் என அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனையும் செய்கிறேன்" எனக் கூறியுள்ளார்.