Know The AQI Your City: டெல்லியில் காற்று மாசு தீவிர கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. டெல்லி மக்கள் விஷக் காற்றை சுவாசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். டெல்லியின் AQI தொடர்ந்து மோசமான பிரிவில் உள்ளது. சுத்தமான காற்றை சுவாசிக்க மக்கள் ஏங்க ஆரம்பித்து விட்டார்கள், இந்த மூச்சுத்திணறல் காற்றில் இருந்து எப்போது நிவாரணம் கிடைக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லி காற்றின் தரக் குறியீடு குறித்து பார்ப்போம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஷக் காற்றால் மக்கள் சிரமம்


டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு தீவிரமடைவது வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் மிக மோசமான நிலையில் காற்று மாசு ஏற்பட்டு உள்ளது. டில்லி மற்றும் என்.சி.ஆர். பகுதியில் வசிக்கும் மக்கள் விஷக் காற்றால் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சில காலமாக ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. மறுபுறம் பருவ காலநிலைகள் காரணமாகவும் வட இந்தியாவில் காற்று மாசுபாட்டை அதிகரிக்கின்றன.


உத்தரபிரதேச மாநிலத்தில் காற்றின் தரம் மோசம்


டெல்லியில் மட்டுமில்லாமல் உத்தரபிரதேசம் நகரங்களில் மாசு தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நகரத்தின் பல பகுதிகளில் நிறுவப்பட்ட சென்சார்களில் பெரும்பாலானவை சிவப்பு எச்சரிக்கையை காட்டியது. அதாவது காற்று ஆபத்தான நிலையில் இருந்தது. காற்று தரப்புள்ளி அதிகபட்ச நிலையான 300க்கு மேல் பதிவாகி உள்ளது. 


டெல்லியை ஒட்டி மோசமான பிரிவில் காற்றின் தரம்


அதே நேரத்தில், டெல்லியை ஒட்டியுள்ள நகரங்களிலும் காற்று தரப்புள்ளி (AQI) 400க்கு மேல் பதிவாகி உள்ளது. மோசமான பிரிவில் காற்றின் தரம் இருந்தது. நொய்டாவின் செக்டார் 1ல் காற்று தரப்புள்ளி (AQI) 396 ஆகவும், காஜியாபாத்தில் காற்றின் தரக் குறியீடு (AQI) 381 ஆக பதிவாகி உள்ளது.


பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 23 வரை லீவ்


குருகிராமில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில்ம் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. குருகிராம், சோனிபட் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நவம்பர் 23 வரை மூடப்பட்டுள்ளன.


வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுரை


டெல்லி காற்று மாசு மோசமான பிரிவில் இருப்பதால், 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் இந்த தனியார் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 


விமானங்கள், ரயில்கள் நேரம் மாற்றம்


புது தில்லி ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக 13 ரயில்கள் தாமதமாக வந்தன. பல ரயில்களின் நேரத்தை மாற்ற வேண்டியிருந்தது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 90 விமானங்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க - Exit Poll: மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சியமைக்கப்போவது யார்? Zeenia AI கணிப்பு...!


மேலும் படிக்க - 1 முதல் 12 வரை நேரடி வகுப்பு கிடையாது! இனி ஆன்லைன் கிளாஸ் தான் -அமலுக்கு வந்த உத்தரவு


மேலும் படிக்க - பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.20 லட்சம்... இல்லாவிட்டால் ரூ.5 லட்சம் தான்.. புதுவித மோசடியால் பயங்கரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ