மது கிடைக்காமல் ஏங்கிக்கொண்டிருந்த போபாலில் மூன்று சகோதரர்கள் சானிடிசர் உட்கொண்டு இறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்களின்படி, பார்வத் அஹிர்வார் (55), ராம் பிரசாத் அஹிர்வார் (50), பூரா அஹிர்வார் (47) ஆகிய மூன்று சகோதரர்கள் மதுவுக்கு அடிமையானவர்கள்.


வீடுகளுக்கு பெயிண்ட் அடித்து வாழ்க்கை நடத்தும்  ராம் பிரசாத், ஜஹாங்கிராபாத்தில் வசித்து வந்தார், மற்ற இரண்டு சகோதரர்களும் அருகில் உள்ள இடத்தில் கூலி வேலை செய்தனர்.


கோவிட் (Corona) கட்டுப்பாடுகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மதுபானக் கடைகளுக்கு முழுமையான தடை இருந்ததாதால், கடைகள் ஏதும் திறக்கவில்லை.  அதனால், மூன்று சகோதரர்களும் எங்கிருந்து மது வாங்க முடியாமல் போனது. அதனால், அவர்கள் சானிடைஸரை அருந்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.


ALSO READ | Twitter பயனர்களின் நெடுநாள் எதிர்பார்ப்பான Undo அம்சம் விரைவில்... ஆனால், ஒரு நிபந்தனை!


திங்களன்று, சகோதரர்கள் ஐந்து லிட்டர் கேன் சானிடிசரை வாங்கி வந்து, ஆல்கஹால் உள்ள சானிஸைரை குடித்தால் போதை ஏற்படும் என நினைத்து குடித்து விட்டனர்.  ஆனால் அவர்கள் அதைக் குடித்ததில் பரிதாபமாக இறந்துவிட்டார்கள்.


பூரா மற்றும் பார்வத் ஆகிய இருவரும் சாலை ஓரத்தில் கிடந்தனர் என்றும் பூரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் எனவும் போலீஸார் தெரிவித்தனர். பர்வத் நடைபாதையிலேயே இறந்து கிடந்தார். ஜின்ஸி பகுதியில் உள்ள ஒரு அறையில் மூன்றாவது சகோதரர் ராம் பிரசாத்தின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.


முன்னதாக, மாநில தலைநகர் போபாலில் சானிடிசர் உட்கொண்டு மூன்று பேர் உயிரிழந்தனர். கோவிந்த்புரா காவல் நிலைய பகுதியில், ஒரு மைனர் தனது மைத்துனர் மற்றும் மற்றொரு உறவினர் ஆகியோர் சானிடைஸர் குடித்து விட்டனர்.  இந்த சம்பவத்தில் மூவரும் உயிரிழந்தனர்.


ALSO READ | அரவக்குறிச்சியில் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சார களத்தில் எடப்பாடி பழனிச்சாமி..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR