ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை அருகே பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு: ஜம்மு அருகே வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு காவலர் காயமடைந்துள்ளார். 


அதிகாலை 5.45 மணியளவில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நக்ரோட்டா டோல் போஸ்ட் அருகே வாகன சோதனை நடத்திய போலீஸ் குழு ஸ்ரீநகர் செல்லும் லாரி ஒன்றைத் தடுத்து நிறுத்தியது. இதையடுத்து, லாரிக்குள் இருந்த பயங்கரவாதிகள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். பதிலடி கொடுக்கும் விதமாக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு போராளி கொல்லப்பட்டார், மற்றவர்கள் வனப்பகுதியை நோக்கி ஓடினர்.



DGP J&K காவல்துறை, தில்பாக் சிங், பயங்கரவாதிகள் ஒரு புதிய குழுவின் அங்கம் என்றும் அவர்கள் ஸ்ரீநகருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். "இந்த பயங்கரவாதிகள் புதிதாக ஊடுருவிய குழு மற்றும் அவர்கள் ஸ்ரீநகருக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஹிராநகர் எல்லையான கத்துவாவிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படுகிறது. விசாரணையும் நடந்து வருகிறது," என்று அவர் ANI இடம் கூறினார்.


தப்பிய தீவிரவாதியை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. இதற்கிடையில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் மோதலைத் தொடர்ந்து உதம்பூர் மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. உதம்பூரின் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் பியூஷ் சிங்லா உறுதிப்படுத்தியுள்ளார்.