அகர்த்தலா: திரிபுரா சட்டசபையில் நேற்று சபாநாயகர் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த செங்கோலை  திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., எடுத்து சென்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரிபுரா சட்டசபையில் நேற்று அம்மாநில வனத்துறை மந்திரி நரேஷ் ஜாமாதியாவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை எழுப்பி எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கோஷம் எழுப்பியது. 


இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அடங்கிய மொத்த காங்கிரஸ் உறுப்பினர்களும் முதல்-மந்திரி மாணிக் சர்கார் பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மாணிக் சர்கார் உள்துறை மந்தியாக உள்ளார். மாணிக் சர்கார் பேசுகையில் இப்பிரச்சனையானது நீதிமன்றத்தின் கீழ் உள்ளது, தீர்ப்புக்கு எதிர்க்கட்சியினர் காத்திருக்க வேண்டும் என்றார். இதனையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கடுமையாக கோஷம் எழுப்பினர். 


கடும் அமளி ஏற்பட்ட நிலையில் கோபம் அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ராய் புர்மான் சபாநாயகர் முன்னாள் இருந்த செங்கோலை எடுத்துவிட்டு ஓட தொடங்கினார்.


சட்டசபை முழுவதும் ஓடிய அவரை பிடிக்க முடியவில்லை, பின்னர் காவலரிடம் அவர் செங்கோலை ஒப்படைத்துவிட்டு சென்றார்.  திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ அந்த செங்கோலை எடுத்துவிட்டு ஓடும் வீடியோ பரபரப்பை ஏற்ப்பட்டுள்ளது.