இந்த நாள் உண்மையில் வரலாற்றில், மிகவும் கொரூரமான நாட்களில் ஒன்று. 1947 ஆம் ஆண்டு, இதே நாளில் தான், அதாவது அக்டோபர் 22ம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் ஜம்முகாஷ்மீர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் (Pakistan)  காஷ்மீரை ஆக்கிரமித்ததை எடுத்துரைக்கும் வகையில்,  அக்டோபர் 22ம் தேதி, அதாவது இன்று  கருப்பு தினமாக இந்தியா அனுசரிக்க  உள்ளது.


இந்த நாளைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 22 ஆம் தேதி ஸ்ரீநகரில் (Srinagar), பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீர் மக்கள் மீது நடத்திய அட்டூழியங்கள் மற்றும் இது தொடர்பான பிற தகவல்கள் அடங்கிய கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


1947 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில்(Jammu and Kashmir) பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அக்டோபர் 22 ஐ இந்தியா கருப்பு நாளாகக் கொண்டாடுகிறது. பாகிஸ்தான் இராணுவ பெற்ற தீவிரவாதிகள், சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சொந்தமான காஷ்மீருக்குள் நுழைந்தனர். உள்ளூர் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை நடத்தினர்.


"கோடாரி, வாள் மற்றும் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை ஏந்திய பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவுடன் காஷ்மீருக்குள்  'லஷ்கர்கள்'என்னும் பயங்கரவாதிகள் காஷ்மீரைத் தாக்கினர், அங்கு அவர்கள் ஆண்கள், குழந்தைகளை செட்டி கொலை செய்தனர் மற்றும் பெண்களை அடிமைகளாக மாற்றினர்," என்று ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி IANS செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நாளைக் குறிக்கும் வகையில், அக்டோபர் 22 ஆம் தேதி ஸ்ரீநகரில் காஷ்மீர் மக்கள் மீது நடத்திய  அட்டூழியங்கள் மற்றும் இது தொடர்பான பிற தகவல்கள் அடங்கிய கண்காட்சி ஒன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


அக்டோபர் 22, 1947 இல் நடந்தது என்ன?
1000 பழங்குடியினரைக் கொண்ட 'லஷ்கர்'  என்ற படையை உருவாக்க பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டது. பாகிஸ்தானின் படைப்பிரிவு அதிகாரிகள், இந்த படையினருக்கு, பன்னு, வன்னா, பெஷாவர், கோஹாட், தால் மற்றும் நவ்ஷெரா ஆகிய இடங்களில் ஆயுதங்கள்  வழங்கினர்.


மேஜர் ஜெனரல் அக்பர் கான் லஷ்கர் படைக்கு உதவ வேண்டும் என  மேஜர் மற்றும் கேப்டன் நிலையிலான அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார்.


பாகிஸ்தான் இராணுவத்தின் படை பிரிவு 1947 அக்டோபர் 21 இரவு முர்ரி-அபோட்டாபாத் பகுதியை அக்கிரமித்தது. லஷ்கர்கள் மற்ற பகுதிகளில் ஆக்கிரமித்தனர். தீவிரவாதிகள் அக்டோபர் 26, 1947 அன்று பாரமுல்லாவுக்குள் நுழைந்து உள்ளூர் மக்களுக்கு எதிராக அட்டூழியங்களை நடத்தத் தொடங்கினர்.


"இளம்பெண்கள் கடத்தப்பட்டு, சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லாமல் கடத்தி செல்லப்பட்டனர். ஒவ்வொரு தீவிரவாதியும் தன்னால் முடிந்த அளவு செல்வத்தை திருடினர்.  பல பெண்களை கடத்திச் சென்றனர்" என்று ஒரு அதிகாரி கூறினார்.


பின்னர், இந்திய இராணுவத்தின் முதல் படைப் பிரிவு அக்டோபர் 27, 1947 அன்று ஸ்ரீநகரை அடைந்து பாகிஸ்தான் படைகளை விரட்டியது.


ALSO READ | LTTEக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது? இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி கேள்வி! தடை நீங்க வாய்ப்பு!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR