வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோர் ஆதார் எண்ணுடன் பான் பார்ட் எண்களை இணைக்க இன்று கடைசி நாளாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019-2020-க்கான வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யும் வரி செலுத்துவோர் ஆதார்-பான் எண்களை இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. 


இந்நிலையில் தற்போது incometaxindiaefiling.gov.in. என்ற வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதத்தில் இரு எண்களையும் இணைக்க லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் 567678 மற்றும் 56161 ஆகிய எண்களுக்கு UIDPAN என டைப் செய்து அடைப்புக் குறிக்குள் < 12 இலக்க ஆதார் எண்ணையும்>< 10 இலக்க பான் எண்ணையும்> குறுஞ்செய்தி அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.