நாளை மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல்: மத்திய அரசு உறுதி
குடியுரிமை திருத்த மசோதா 2019 (CAB) நாளை பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆதரவு அளிப்போம் எனக் கூறியுள்ளது.
புது டெல்லி: குடியுரிமை திருத்த மசோதா 2019 (CAB) மக்களவை நிறைவேற்றிய பின்னர், நாளை புதன்கிழமை (டிசம்பர் 11) பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்படும். இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த மசோதாவை (Citizenship Amendment Bil l2019) மாநிலங்களவையில் நிறைவேற்ற மோடி தலைமையிலான அரசாங்கம் உறுதிபூண்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு காங்கிரஸ் தனது அனைத்து மாவட்ட பிரிவுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அனைத்து தரப்பு எதிர்கட்சிகளின் ஆதரவை ஆதரவையும் பெற்று மத்திய அரசின் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அமெரிக்காவின் மத சுதந்திரத்திற்கான சர்வதேச ஆணையம் (USA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களவைக்குப் பிறகு, இந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசாங்கம் நிறைவேற்றினால், அதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த மசோதா குடியுரிமை உரிமைகளை மீறுவதாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்த ஆணையம் கூறிய கருத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று இந்திய அரசு கூறியுள்ளது:
மத சுதந்திரம் குறித்த அமெரிக்க சர்வதேச ஆணையத்தின் இந்த கருத்து பொறுப்பற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெளிவாகக் கூறியுள்ளது. மெரிக்காவின் மத சுதந்திரத்திற்கான சர்வதேச ஆணையத்தின் பார்வை இந்தியாவைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட மனநிலையுடன் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
மற்ற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு குடிபெயர்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்க இந்தியா இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. ஒரு வகையில் இந்த மசோதாவை வரவேற்க வேண்டும், ஆனால் அமெரிக்க ஆணையம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இது இந்தியாவின் உள்துறை விவகாரங்களில் தலையீடுவது போல உள்ளது. இதனால் ஆணையத்தின் கோரிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் தள்ளுபடி செய்கிறது, இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆணையத்தின் இந்த கருத்தை நிராகரித்துள்ளது.
இந்த மசோதா மதியம் 2:00 மணிக்கு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்:
ஆனால் மத்திய அரசாங்கம் மற்ற கட்சிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தி வருகிறது. இந்த மசோதாவை மாநிலங்களவையிலும் நிறைவேறும் என்று மத்திய அரசாங்கத்திற்கு கணக்கீடு செய்துள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் அதிமுகவும் இந்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரவு அளிப்போம் என அறிவித்துள்ளது. இந்த மசோதா புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்படும். இந்த மசோதாவை குறித்து விவாதிக்க மத்திய அரசாங்கம் சுமார் 6 மணிநேர அவகாசம் வைத்திருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் போராட்டமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த மசோதா எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல, மத அடிப்படையில் கொண்டு வந்தது அல்ல என்று மத்திய அரசு தெளிவாகக் கூறியுள்ளது.
பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடிபெயர்ந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பாஜக தனது பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ஆம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.
இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட போதிலும், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், இந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது. ஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. இதற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு காங்கிராஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.