Lok Sabha Election 2024 Phase 2 Polling Turnout: 18வது மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, சொத்து பகிர்ந்தளித்தல், வாரிசுரிமை வரி என பெரும் பரபரப்புடன் இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 13 மாநிலங்கள் 88 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவின் 20 தொகுதிகள்; கர்நாடகாவின் 14 தொகுதிகள்; ராஜஸ்தானின் 13 தொகுதிகள்; மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 8 தொகுதிகள்; மத்திய பிரதேசங்களில் 7 தொகுதிகள்; அசாம், பீகார் ஆகிய மாநிலங்களில் தலா 5 தொகுதிகள்; மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கரில் ஆகிய மாநிலங்களில் தலா 3 தொகுதிகள்; ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், திரிப்புரா ஆகிய மாநிலங்களில் தலா 1 தொகுதியில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 


மாலை 7 மணி நிலவரப்படி...


இன்றைய தேர்தல் வாக்குப்பதிவில் 61 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக திரிபுராவில் 79.04 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் 54.85 சதவீதமும் பதிவாகி உள்ளது. 6 மணி நிலவரப்படி மணிப்பூரில் 77.18 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 71.84 சதவீதமும், சத்தீஸ்கரில் 73.55 சதவீதமும், அசாமில் 71.11 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 71.91 சதவீதமும், கர்நாடகாவில் 68.8 சதவீதமும், கேரளாவில் 65.59 சதவீதமும், ராஜஸ்தானில் 64.07 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 57.62 சதவீதமும், மகாராஷ்டிராவில் 55.57 சதவீதமும், பீகாரில் 55.08 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 


1 தொகுதியில் மட்டும்... 


மொத்தம் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அங்கு மே 7ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின்போது தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக SC, ST, OBC உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி -ஜே.பி. நட்டா


நட்சத்திர வேட்பாளர்


காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, கேசி வேணுகோபால், பூபேஷ் பாகல், அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், சசி தரூர் ஆகியோரும், பாஜக சார்பில் ராஜீவ் சந்திரசேகர், ஹேமா மாலினி, அருண் கோவின், தேஜஸ்வி யாதவ், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 


பாஜக கேரளாவில் தனது கணக்கை தொடங்க துடிக்கிறது. இருதுருவ அரசியலை முறியடித்து மூன்றாவது கட்சியாக அங்கு நிலைபெற பாஜக இம்முறை மத்திய அமைச்சர்காளன ராஜிவ் சந்திரசேகர் மற்றும் வி. முரளிதரன் ஆகியோரை களமிறக்கியுள்ளது. குறிப்பாக, ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் கேரள பாஜக மாநில தலைவர் சுரேந்திரனை அக்கட்சி இறக்கி உள்ளது. 


கேரளாவில் கணக்கை தொடங்குமா பாஜக?


கேரளாவில் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் எதிரெதிர் பக்கங்களில் நின்றாலும் தேசியளவில் பார்க்கும்போது அவை இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது. இதுவரை கேரளாவில் இருந்து ஒருவர் கூட மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது கிடையாது என்பதே வரலாறாக இருந்துள்ளது. இதனை மாற்ற பாஜக கடுமையாக போராடி வருகிறது. 


வட இந்திய மாநிலங்கள், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மேற்கிந்திய மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி மேற்கு வங்கம் போன்ற கிழக்கு மாநிலங்களிலும், தென் மாநிலங்களில் பெருமளவிலான தொகுதிகளை கைப்பற்ற பாஜக துடிக்கிறது இதன்மூலம் அக்கட்சி மட்டும் 370 தொகுதிகளை தனியாக தூக்க திட்டமிட்டுள்ளது. குஜராஜ், இந்தி பேசும் மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்களில் மட்டும் பெருவாரியான இடங்களை கைப்பற்றி கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக 303 தொகுதிகளை கைப்பற்றியது. 


பிரதமர் மோடியின் பதிவு...


பிரதமர் மோடி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,"இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மிகவும் நன்றாக இருந்தது. இன்று வாக்களித்த நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நன்றி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த இணையற்ற ஆதரவு எதிர்க்கட்சிகளை மேலும் ஏமாற்றப் போகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகின்றனர். இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்களின் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அளித்து எங்களை வலுப்படுத்துகின்றனர்" என குறிப்பிட்டுள்ளார். 


காங்கிரஸின் நிலை என்ன?


மறுபுறம், காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக இடங்களை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு பின் அக்கட்சியின் முழக்கம் பலமாகியுள்ளது என்றே கூறலாம். ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தர பிரதேசங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. பீகாரில் இன்று தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும் என ராஷ்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | 'பதறுகிறார் மோடி... இன்னும் கொஞ்ச நாளில் மேடையில் அழுவார் பாருங்கள்' - ராகுல் காந்தி கணிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ