ஏழைகளிடம் இருந்து பணத்தை பறித்து கோடீஸ்வரர்களிடம் ஒப்படைத்தார் மோடி -ராகுல் காந்தி

Congress, Lok Sabha Election 2024: கர்நாடக மாநிலம் பிஜாபூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, "கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து பணத்தை மட்டுமே நரேந்திர மோடி பறித்துள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 26, 2024, 05:33 PM IST
  • கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து பணத்தை மட்டுமே நரேந்திர மோடி பறித்துள்ளார் -ராகுல் காந்தி
  • கடந்த 10 ஆண்டுகளில் 20-25 பேரை கோடீஸ்வரர்களாக நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார் -ராகுல் காந்தி
  • கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பதட்டமாக இருக்கிறார், இனி கண்ணீர் விடுவார் -ராகுல் காந்தி
ஏழைகளிடம் இருந்து பணத்தை பறித்து கோடீஸ்வரர்களிடம் ஒப்படைத்தார் மோடி -ராகுல் காந்தி title=

Rahul Gandhi Speech In Bijapur: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பிஜாபூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, "நாட்டில் நிலவி வரும் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற முக்கிய பிரச்சினைகளை பற்றி பேசாமல், பிரதமர் மோடி 24 மணி நேரமும் உங்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மிகவும் பதட்டமாக இருக்கும் பிரதமர் மோடி -ராகுல் காந்தி

கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பதட்டமாக இருப்பது அவரின் பேச்சுக்கள் மூலம் தெரிகிறது. இன்னும் சில நாட்களில் அவர் மேடையில் கண்ணீர் கூட விடக்கூடும்" என்று காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார். 

"மோடி உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார். சில சமயங்களில் அவர் சீனா மற்றும் பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார், சில சமயங்களில் அவர் உங்கள் மொபைல் போன்களின் ப்ளாஷ் லைட்டை ஆன் செய்து இயக்கச் சொல்வார். சில சமயங்களில் உங்கள் தாலி பற்றி பேசுவார் என்று ராகுல் காந்தி கூறினார்.

ஏழைகளிடம் இருந்து பணத்தை பறித்த நரேந்திர மோடி -ராகுல் காந்தி

கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து பணத்தை மட்டுமே நரேந்திர மோடி பறித்துள்ளார் என்று ராகுல் கூறினார். நாட்டின் 70 கோடி மக்களிடம் உள்ள பணத்தை 22 பேருக்கு வழங்கியுள்ளார். இந்தியாவில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே 40 சதவீத செல்வத்தை கட்டுப்படுத்துகின்றனர். 

மேலும் படிக்க - ‘பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்’ நேரில் சந்திக்க தயார்.. பிரதமருக்கு கார்கே கடிதம்

 

ஏழைகளுக்கு காங்கிரஸ் பணம் கொடுக்கும் -ராகுல் காந்தி

எனவே வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்தை ஒழிப்பதில் காங்கிரஸ் கட்சி பங்களிக்கும், நரேந்திர மோடி கோடீஸ்வரர்களுக்கு வழங்கிய அந்த தொகையை இந்தியாவின் ஏழைகளுக்கு வழங்குவோம் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மோடி எதுவும் கொடுக்கவில்லை -ராகுல் காந்தி

கடந்த 10 ஆண்டுகளில் 20-25 பேரை கோடீஸ்வரர்களாக நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார் என்று ராகுல் காந்தி கூறினார். அவர் விமான நிலையம்-துறைமுகம், மின்சாரம், சுரங்கங்கள், சூரிய-காற்றாலை மின்சாரம், பாதுகாப்பு துறை என அனைத்தும் அதானி மற்றும் அவரைப் போன்ற கோடீஸ்வரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏழைகளுக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை என மோடி அரசை கடுமையாக சாடினார். 

உங்கள் கைதட்டலே சான்று -ராகுல் காந்தி

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி என்ன உத்தரவாதம் அளித்தது. அதை செய்து காட்டி விட்டார்கள். உங்கள் கைதட்டல் இதற்குச் சான்று என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார்.

கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலை உறுதி செய்யப்படும் -ராகுல் காந்தி

இந்தியாவின் ஒவ்வொரு வேலையில்லா பட்டதாரிக்கும் தொழிற்பயிற்சி உரிமையை வழங்கப்போகும் உலகின் முதல் அரசாக இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்தார். முதல் பணியாக கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலை உறுதி செய்யப்படப் போகிறது என்று ராகுல் காந்தி கூறினார். தனியார் துறை, பொதுத்துறை, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இளைஞர்களுக்கு இந்தியா கூட்டணி அரசு பயிற்சி அளிக்கும் என்றார்.

மேலும் படிக்க - மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News