புதுசு கண்ணா புதுசு... ரயில் என்ஜினை திருடிச்சென்ற திருடர்கள் - திடுக்கிட்ட ரயில்வே!
பழுதுபார்க்க ரயில்வே யார்டுக்கு கொண்டுவரப்பட்ட ரயில் இன்ஜினை மிகப்பொறுமையாக திருடர்கள் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்களில் திருட்டு, கொள்ளை சம்பவம் நடப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம். ஆனால், இங்கு ரயில் இன்ஜினையே திருடர்கள் திட்டம்போட்டு திருடிய சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏதோ குழந்தைகள் விளையாடும் பொம்மை ரயிலை அவர்கள் தூக்கிக்கொண்டு செல்லவில்லை. நிஜ ரயிலின் மொத்த டீசல் என்ஜினின் ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியாக பிரித்து ரயில்வே கட்டுப்பாட்டில் இருந்து திருடிச்சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், பெகுசராய் மாவட்டத்தில் உள்ள கர்ஹாரா யார்டு எனும் ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில்தான் இந்த திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,"பழுதான் இன்ஜின் ஒன்று பழுதுநீக்கம் செய்ய ரயில்வே யார்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதை அறிந்த திருடர்கள், யார்டு பகுதியில் ரகிசயமாக தோண்டி ஒரு சுரங்கத்தையே உருவாக்கியுள்ளனர்.
மேலும் படிக்க | உடலுறவின் போது இறந்த நபர்... உதவிக்கு வந்த காதலியின் கணவர்
அந்த சுரங்கம் வழியாக புகுந்து மிக பொறுமையாக, என்ஜினின் ஒவ்வொரு பாகமாக பிரித்தெடுத்து சென்றுள்ளது. என்ஜினில் பல்வேறு உதிரி பாகங்களை காணவில்லை என்பதை அறிந்த பணியாளர்கள், காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர்" என்றனர்.
இதையடுத்து, ரயில்வே யார்டு சார்பில் அளித் புகாரின் பேரில், பாரௌனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே போலீசாரும் காணாமல் போன உதிரிபாகங்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை (RPF) ஆய்வாளர் பிஎஸ் தூபே கூறுகையில்,"கர்ஹாரா யார்டுக்கு பழுதுபார்க்க கொண்டவரப்பட்ட டீசல் என்ஜினை திருடிவிட்டதாக பாரௌனி காவல் நிலையத்தில் கடந்த வாரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், இதுவரை 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் கிடைத்த தகவல்களின்படி, முர்ஸாபூர் மாவட்டத்தின் பிரபாத் நகர் பகுதியில் இருந்த கிடங்கு ஒன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு ரயில் என்ஜினின் உதிரிபாகங்கள் அடங்கிய 13 சாக்கு பைகள் கைப்பற்றப்பட்டன. அந்த கிடங்கின் உரிமையாளரை தேடி வருகிறோம்.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் எஞ்சின் பாகங்கள், பழங்கால ரயில் என்ஜின்களின் சக்கரங்கள் மற்றும் கனமான இரும்பினால் செய்யப்பட்ட ரயில்வே பாகங்கள் ஆகியவை அடங்கும். ரயில்வே யார்டுக்கு சுரங்கம் தோண்டி, அதன் வழியாக இன்ஜின் உதிரிபாகங்கள் மற்றும் பிற பொருட்களை சாக்கு மூட்டைகளில் கொண்டு செல்வது அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இரும்புப் பாலங்களின் உதிரிபாகங்களைத் திருடுவதிலும் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது" என்றார்.
கடந்த ஆண்டு, பூர்னியா நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய நீராவி இன்ஜினை விற்றதாகக் கூறி, சமஸ்திபூர் லோகோ டீசல் ஷெட்டின் ரயில்வே பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பொறியாளர் சமஸ்திபூர் கோட்ட மெக்கானிக்கல் இன்ஜினியரின் போலிக் கடிதத்தைப் பயன்படுத்தி மற்ற ரயில்வே அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் சேர்ந்து என்ஜினை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு ஷாக்: ரயிலில் உணவு வாங்க இனி அதிக செலவாகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ