விழாக்காலம் மற்றும் பண்டிகை ரயில் டிக்கெட்டுகளை கூடுதல் விலையில் விற்கவும், சாதாரண நாள்களில் சலுகை விலையில் அளிப்பது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியது:


ரயில்வே மூத்த அதிகாரிகளுடனான சிறப்பு கூட்டத்தில், ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் பங்கேற்றார். அப்போது, தேவைக்கேற்ப ரயில் கட்டணத்தை மாற்றிக் கொள்ளும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பண்டிகைக் காலங்களில், அதிகளவில், மக்கள் ரயில் பயணத்தை விரும்புவர். இந்நிலையில் தேவையை பொறுத்து, ரயில் பயண கட்டணத்தை அதிகரிக்கலாம், விரும்பப்படாத நேரங்களில், வழித்தடங்களில் செல்லும் பயணியருக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கலாம், என்று கூட்டத்தில் கூறப்பட்டது.


மேலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி மற்றும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலத்தில் குறிப்பிட்ட இடங்களை அடையும் ரயில்களில் சலுகைவிலையில் டிக்கெட்டுகளை விற்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 


அதேபோல், காலியாக உள்ள பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு முதல்கட்டமாக 10 முதல் 30 சதவிகிதம் வரையிலும் சலுகை வழங்கவும், பண்டிகை காலங்களில் கூடுதலாக 10 முதல் 20 சதவிகிதம் வரை கட்டணம் வசூலிக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 


விழாக்காலம் மற்றும் பண்டிகை நாள்கள், பயணிகள் அதிகம் பயணிக்கும் பண்டிகை நாள்களாக அந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த முடிவை ரயில்வேத் துறை வரும் 31-ம் தேதிக்குள் எடுக்கப்படலாம்.