முப்படையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு விமானம் இயக்கும் பயிற்சியை வழங்குவதற்காக இந்துஸ்தான் டர்போ டிரெயினர் என்ற HTT-40 சிறிய ரக விமானத்தை முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்க திட்டமிடப்பட்டது. 2013-ம் ஆண்டு இந்த விமானத்திற்கான வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது. பிறகு 2015-ம் ஆண்டு இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முதல் HTT-40 பயிற்சி விமானத்தை தயாரித்து தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 12 மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டது.


2 பேர் அமரும் வசதி கொண்ட இந்த பயிற்சி விமானம் பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் முன்னிலையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விமானத்தில் குரூப் கேப்டன் சி.சுப்பிரமணியம், வேணுகோபால் ஆகியோரும் பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்போர்ட்டில் சுமார் 15 நிமிடங்கள் வரை பறந்தனர்.