எதிர்வரும் தெலங்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 32-வயது திருநங்கை சந்திரமுகி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் டிசம்பர் 7-ஆம் நாள் நடைபெறவுள்ள தெலங்கானா சட்டமன்ற தேர்தல் 2018-ல் கோஸ்மால் தொகுதியில் இருந்து போட்டியிடுவதற்கான திருநங்கை சந்திரமுகி நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். CPM தலைமையிலான பகுஜன் இடது முன்னணி சார்பில் இவர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சந்திரமுகி போட்டியிடும் கோஸ்மால் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான முகேஷ் கோந்த் மற்றும் பாஜக மூத்த தலைவர் T ராஜா சிங் போட்டியிடுகின்றனர். எனவே சந்திரமுகி தனது தொகுதியில் இருபெரும் தலைவர்களை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து சந்திரமுகி தெரிவிக்கையில்.... மூன்றாம் பாலினத்தவருக்கு வாய்ப்பு அளிக்க எந்த கட்சியும் முன்வருவதில்லை, ஆனால் பகுஜன் இடது முன்னணி தற்போது எனக்கு வாய்ப்பளித்துள்ளது. இந்த வாய்ப்பின் மூலம் வெற்றிபெற்றால், நிருநங்கைகளுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய காலக்கட்டத்தில் ஆட்சி அதிகாரம் ஒரு பிரிவினரிடையே மட்டும் அடங்கியுள்ளது, இந்த வழக்கத்தினை மாற்றியாக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


32-வயதாகும் சந்திரமுகி பிறப்பால் ஒரு ஆண் ஆவார். தனது 15-வது வயதில் பாலின மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்ட இவர், அதன்பின் மூன்றாம் பாலினத்தவர் குடியிருப்பில் வசித்து வருகின்றார். மேலும் தொடர்ந்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார்.