மக்களவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 40.5% பெண் வேட்பாளர்கள் போட்டியிடவிருப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் முக்கிய தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 


இந்நிலையில் 42 மக்களவை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, அதன் தலைவர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் வெளியிட்டார். அதன்படி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 40.5 சதவிகித இடங்கள் மகளிர் வேட்பாளருக்கு ஒதுக்கி போட்டியிட வாய்ப்பளிப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.