Election Results 2024: ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து! பிகாருக்கு என்ன?
Special Status for AP & Andhra Pradesh politics: சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்த நிலையில், தற்போது அது கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கத் தயார் என்ற செய்திகள் தீயாக பரவி வருகின்றன. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் இது தொடர்பாக இந்தியா கூட்டணி உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை
சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்னெடுத்து, தீவிரமாக முயற்சி செய்து வந்தார் குறிப்பிடத்தக்கது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த சிறப்பு அந்தஸ்தை பாரதிய ஜனதா கட்சி நீக்கியது பெரும் சர்ச்சையானது என்றால், ஒரே மாநிலமாக இருந்த ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலத்தை பிரித்து தனி மாநிலமாக்கியது காங்கிரஸ்.
தனி மாநில கோரிக்கையும் சிறப்பு அந்தஸ்தும்
தனி தெலங்கானா மாநிலத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் என பல போராட்டங்கள் நடைபெற்று இறுதியாக தெலங்கானா உருவானது. தற்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது என்பது தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக இருப்பது எதை குறிக்கிறது? விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
சமூகப் பொருளாதாரம் மற்றும் புவியியல் குறைபாடுகள் உள்ள மாநிலங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த மாநிலத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறப்புப் பிரிவு அந்தஸ்து கொண்ட மாநிலமாக மத்திய அரசு வகைப்படுத்தும். மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தருவது தொடர்பாக 1969ம் ஆண்டில் முடிவெடுக்கப்பட்டது.
இந்தியா என்பது "மாநிலங்களின் ஒன்றியம்"
இந்தியா என்பது "மாநிலங்களின் ஒன்றியம்" என்பதால் தான், மத்திய அரசு என்ற பெயரை ஒன்றிய அரசு என அழைக்கத் தொடங்கியது தமிழ்நாட்டின் திமுக அரசு என்பதால் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளும் நினைவில் இருக்கலாம். இந்தியவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்துமே நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசின் வருவாயில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு பகுதியைப் பெறுகின்றன.
நிதி ஆயோக்கின் பரிந்துரைகள் இருந்தாலும்கூட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 275வது பிரிவின்படி சில மாநிலங்களுக்குகூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கலாம். இந்திய மாநிலங்களில், 11 மாநிலங்கள் ஏற்கனவே சிறப்பு வகை மாநிலங்களின் பெயரைக் கொண்டுள்ளன, மேலும் சில மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று கேட்கின்றன.
மலைப்பாங்கான மற்றும் சவாலான நிலப்பரப்பு, நாட்டின் முக்கியமான எல்லைப் பகுதிகள், குறைந்த தனிநபர் வருமானம், மக்கள் தொகை அடர்த்தி குறைவாக இருப்பது, பழங்குடி மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிப்பது, பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் பின்தங்கிய நிலை, மாநில நிதிநிலைமையில் நிச்சயமற்ற தன்மை என்பதன் அடிப்படையில் மாநிலங்களுக்கு சிறப்பு வகை அந்தஸ்து வழங்கப்படுகிறது.
தேசிய வளர்ச்சி கவுன்சில் பின்வரும் அளவுகோல்களின் அடிப்படையில் சிறப்பு வகை அந்தஸ்தை வழங்குகிறது. மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான அளவுகோல்கள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
வளப் பற்றாக்குறை உள்ள மாநிலம்
தனிநபர் வருமானம் குறைவாக உள்ள மாநிலம்
மாநிலத்தில் நிதி பற்றாக்குறை
பொருளாதார மற்றும் கட்டமைப்புகளில் வளர்ச்சி இல்லாத நிலை
பழங்குடியினரின் எண்ணிக்கை அதிகம்
புவியியல் அமைப்பு
நாட்டின் முக்கிய எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள மாநிலம்
குறைவான மக்கள் தொகை
சிறப்பு வகை அந்தஸ்து கொண்ட மாநிலங்கள்
தற்போது, அசாம், நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், உத்தரகாண்ட் மற்றும் தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்கள் சிறப்புப் அந்தஸ்து கொண்ட மாநிலங்கள் ஆகும்.
ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கக் காரணம், பொருளாதரத்தின் அடிப்படையில் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ‘இந்த’ 5 தமிழக தொகுதிகளில் திமுகவிற்கு வெற்றி முகம்! வெற்றி பெறப்போகிறவர்கள் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ