திரிபுரா வெற்றி கர்நாடக தேர்தலை பாதிக்காது - சித்தராமையா!
திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றியானது, கர்நாடக சட்டமன்ற தேர்தலை பாதிக்காது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்!
திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றியானது, கர்நாடக சட்டமன்ற தேர்தலை பாதிக்காது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்!
59 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டமன்ற தேர்தலில் 43 இடங்களை பிடித்து தனி பெரும்பான்மையுடம் பாஜக ஆட்சி பிடித்தது. கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவினை தங்கள் கோட்டையாக வைத்திருந்த கம்யூனிஸ்ட கட்சியினரை வீழ்த்தி பாஜக இந்த வெற்றியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் உள்ள 59 இடங்களில் பாஜக 43, கம்யூனிஸ்ட 16 இடங்களை பிடிக்க, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது வேதனை. கடந்த ஆட்சியில் திரிபுரா சட்டமன்றத்தில் ஒரு MLA கூட இல்லை, ஆனால் தற்போது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது பாஜக.
இந்த வெற்றிக்கு காரணம் பிரதமர் மோடி தான் எனவும், இந்த வெற்றி நிச்சையம் வருகின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள் "கர்நாடகாவில் மோடி அலை வீசுவதற்கு வாய்ப்பு இல்லை எனவும், பாஜக ஆட்சியின் ஊழல் வழக்குகளே எங்களுக்கு வெற்றியை கொடுக்கும், எங்களுக்கான வாக்குகளை பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை" என குறிப்பிட்டுள்ளார்!