ED Summon on AAP Leaders in Delhi Liquor Scam Case: டெல்லியில் ஆளும் கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்தடுத்த சோதனைகள் வந்துகொண்டிருக்கின்றன. டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே விசாரணைக்காக சிறையில் உள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தற்போது சிறையில் இருக்கும் நிலையில், டெல்லி அரசியலில் பரபரப்பான சூழல் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் கோவா தலைவர் அமித் பலேகர் உள்ளிட்டோருக்கு அமலாக்க இயக்குனரகம் புதன்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் கோவா தலைவருடன், ராமாராவ் வாக், தத்தா பிரசாத் நாயக் மற்றும் பண்டாரி சமாஜ் தலைவர் அசோக் நாயக் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் நாளை விசாரணையில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை பொய்களை பரப்பி வருவதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. "ED பொய்களை பரப்புகிறது. தத் பிரசாத் நாயக் மற்றும் அசோக் நாயக் ஆம் ஆத்மி தலைவர்கள் அல்ல, அவர்கள் பாஜக தலைவர்கள். அமலாக்கத்துறை இன்று ஒரு நகைச்சுவை பொருளாக மாறிவிட்டது. இந்த ஏஜன்சி பாஜகவின் அரசியல் ஆயுதமாக மட்டுமே செயல்பட்டு வருகின்றது" என்று ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.


இதற்கிடையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஈடி காவலை எதிர்த்தும் தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை அமலாக்க இயக்குனரகத்திற்கு (Enforcement Directorate) நோட்டீஸ் அனுப்பியது.


மேலும் படிக்க | ED -யின் அடுத்த பிடி: கேரள முதல்வர் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு


ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு வழக்கை நிர்ணயித்த நீதிமன்றம், காவலில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவு குற்றம் சாட்டப்பட்டவர் / மனுதாரர் / அரவிந்த் கெஜ்ரிவாலை ஜாமீனில் அல்லது இடைக்கால ஜாமீனில் எடுக்க ஒரு இடைக்கால நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிவித்தது. இந்திய அரசியலமைப்பின் 226 வது பிரிவின் கீழ் உள்ள ரிட் அதிகார வரம்பு, பொதுவாக Cr.P.C இன் 439 வது பிரிவின் கீழ் ஜாமீன் தீர்வுக்கு மாற்று இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. 


இதற்கிடையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி என்சிடி அரசின் (தேசிய தலைநகர் பிரதேசம்) முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கையும் (பிஐஎல்) டெல்லி உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரிக்கும்.


வியாழக்கிழமை, அதாவது இன்று, அன்று நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. முன்னதாக, பணமோசடி வழக்கில் தொடர்புடைய டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாகக் இயக்குனரகம் மார்ச் 21 அன்று கைது செய்தது. அவர் மார்ச் 28 வரை ED காவலில் வைக்கப்பட்டார். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட எதிர்கட்சியான இந்தியா கூட்டணி மார்ச் 31 அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் "மகா பேரணியை" நடத்த உள்ளது.


மேலும் படிக்க | ED காவலில் இருக்கும் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்தது.. ஆபத்தான நிலையில் சர்க்கரை அளவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ