ED காவலில் இருக்கும் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்தது.. ஆபத்தான நிலையில் சர்க்கரை அளவு

Arvind Kejriwal Health: டெல்லி முதல்வர் அரவிந்த் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 27, 2024, 04:29 PM IST
ED காவலில் இருக்கும் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்தது.. ஆபத்தான நிலையில் சர்க்கரை அளவு title=

Delhi Chief Minister Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அவர் உடலின் சர்க்கரை அளவு மீண்டும் 46 மில்லிகிராம் அளவுக்கு குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குநரகம் (ED) மார்ச் 21 அன்று கைது செய்தது. அப்போதிருந்து அவர் அமலாக்கத் துறை காவலில் உள்ளார். 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் வழக்கில் இன்று மாலை 4 மணிக்கு மேல் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. கெஜ்ரிவால் மற்றும் அமலாக்கத் துறையின் வாதங்களைக் கேட்ட நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

அதேநேரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, சர்க்கரை அளவு 46 க்கு கீழே குறைவது மிகவும் ஆபத்தானது. 

மேலும் படிக்க - சிறையிலிருந்து ஆட்சி, அமைச்சர்களுக்கு உத்தரவு: மிகப்பெரிய பிரச்சாரத்திற்கு தயாராகும் ஆம் ஆத்மி கட்சி

இதற்கு ஒரு நாள் முன்பு டெல்லி முதல்வரின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், அமலாக்கத்துறை காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததாகவும், அவரது உடல்நிலை சரியில்லை என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். முதலமைச்சரின் உடல் நலத்திற்காக மக்கள் பிரார்த்தனை செய்யுமாறு சுனிதா கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவர் மார்ச் 28 வரை அமலாக்கத் துறை காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

டெல்லி அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான புதிய கலால் வரிக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் மற்றும் பணமோசடி நடந்ததாகாக் கூறி வழக்கு தொடர்பானது. இந்த புதிய காலால் கொள்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது.

மேலும் படிக்க - மதுபான ஊழல் வழக்கு... கடந்து வந்த பாதை... முக்கிய கைதுகள் குறித்த விபரம்!

சிறையில் இருந்துக்கொண்டே டெல்லி மக்களுக்காக ஆட்சி நடத்துவார் என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. அதைப்போலவே அமலாக்கத் துறை காவலில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அங்கிருந்தபடி உத்தரவுகளை அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்து வருகிறார்.

மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், சிறையில் இருந்தே ஆட்சியை நடத்துவேன் என்றும் கூறியுள்ளார். 'சிறையிலிருந்து ஆட்சி' என்ற திசையில், அவர் நீர் மற்றும் சுகாதாரத் துறைக்கான இரண்டு உத்தரவுகளை வழங்கி வருகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் கேள்வி எழுப்பிய போது, டெல்லி மக்களுக்கு என்னால் ஒரு உத்தரவாதத்தை அளிக்க முடியும். அது சிறையில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை நடத்த முடியாது" என்றார். 

மேலும் படிக்க - சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்த முடியாது.. கெஜ்ரிவாலுக்கு ஆளுநர் செக்.. அடுத்து என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News