சபரிமலை விவகாரம்: சொந்த ஊர் திரும்புகின்றார் திருப்பதி தேசாய்!
சபரிமலை கோவிலுக்குள் சென்றுவிட வேண்டுமென கேரளா வந்த திருப்பதி தேசாய் பயண திட்டம் நிறைவேறாமல் நாளை சொந்த ஊர் திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
சபரிமலை கோவிலுக்குள் சென்றுவிட வேண்டுமென கேரளா வந்த திருப்பதி தேசாய் பயண திட்டம் நிறைவேறாமல் நாளை சொந்த ஊர் திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணியளவில் சபரிமலை ஐய்யப்பன் கோயில் திறக்கப்பட்டது. முன்னதாக நேற்று நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின்னர் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கேரள அரசு அறிவித்தது. இதற்கிடையில் நாளை (நவம்பர் 17) சபரிமலை கோவிலுக்குள் செல்ல வேண்டுமாய் பெண்ணிய ஆர்வலர் திருப்தி தேசாய், தனது பெண் சகாக்கள் 6 பேருடன் கேரளா வருகை புரிந்தார்.
இதற்கான இன்று காலை கொச்சி வந்தடைந்த அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்துக்கு வெளியே பெருவாரியான ஐயப்ப பக்தர்கள், சரண கோஷம் பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக 4 மணி நேரத்துக்கும் மேலாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல் அவர்கள் உள்ளேயே முடங்கினார்.
பின்னர் மிகுந்த போராட்டத்திற்கு பின் வெளியே வந்த அவர், அங்கிருந்த ஆட்டோ, டாக்ஸிக்களை நிலக்கலுக்கு அழைத்துள்ளார். ஆனால் அங்கிருந்த ஒருவரும் திருப்பதி தேசாய் கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. இறுதியா பக்தர்களின் கடும் எதிர்ப்பை மீறி என்ன செய்வதென்று தெரியாமல் அவர், இன்று இரவு தனது சொந்த ஊரான புனேவுக்கே செல்ல முடிவெடுத்துள்ளார் திருப்பதி தேசாய்.