இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் கொரோனா (Corona Virus) குறித்து சர்ச்சைக்குரிய வகையில், தவறான தகவல்களை பதிவிடுவதோடு, மக்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் பதிவிடப்படும் டிவிட்டர் பதிவுகளை நீக்க வேண்டும் என ட்விட்டருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. அதோடு,  பல மாநிலங்களில் படுக்கை வசதிகள் போதுமான அளவு இல்லாத நிலை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல சிக்கல்களும் எழுந்துள்ளன.


இந்நிலையில் கொரோனா தொடர்பான அரசின் செயல்பாடுகள் குறித்து பலர் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் தவறான தகவல்களை பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மக்களிடையே தேவையில்லாமல் குழப்பம் பீதி எழுவதை தவிர்க்க அத்தகைய பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்க வேண்டும் என மத்திய அரசு ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து,  தவறான தகவல்களையும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான சர்ச்சைக்குரிய பதிவுகள் கண்டறியப்பட்டு, 52 ட்விட்டர் பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. 


ALSO READ | Twitter பயனர்களுக்கு எச்சரிக்கை; போலி செய்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை

இந்த ட்வீட்களை இந்தியாவுக்குள் மட்டும் பார்க்க முடியாது என்றும், ஆனால் வெளிநாட்டில் உள்ள பயனர்கள் இந்த ட்வீட்களை காணலாம் தொடர்பு கொள்ளலாம் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது.


2021, பிப்ரவரியில்,  நடைபெற்ற வேளாண் போராட்டத்தின் போதும் ட்விட்டருக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டது. விவாசாயிகள் போராட்டத்தை தூண்டி விடும் வகையிலான பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுடன் தொடர்புள்ள 1178  டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திடம் அரசு கூறியது. 


விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி, அதன் மூலம் விவாசாயிகள் போராட்டத்தை (Farmers Protest), இந்த கணக்குகள் வேலை செய்வதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. 


ALSO READ | அரசு விடுத்த தெளிவான எச்சரிக்கை, கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்தது ட்விட்டர்
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR