பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கணக்குகளில் இருந்து ட்விட்டர் புளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. இந்த தலைவர்களின் பெயர்களுக்கு முன்னால் நீல நிறத்திற்கு பதிலாக, சாம்பல் நிற டிக்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. ட்விட்டரின் உரிமையாளராக ஆனதில் இருந்து, எலோன் மஸ்க் அதில் பல மாற்றங்களைச் செய்து வருகிறார். அவர் முதலில் ப்ளூ டிக் சந்தா கட்டண திட்டத்தை வெளியிட்டார். இது தவிர, நபர்களின் பெயர்களுக்கு முன்னால் தோன்றும் டிக் மூன்று வண்ணங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நீல நிற டிக் மட்டுமே கொடுக்கப்பட்டது. இந்த மாற்றத்தின் கீழ், பிரதமர் மோடியின் கணக்கில் இருந்து நீல நிற டிக் நீக்கப்பட்டு, சாம்பல் நிற டிக் கொடுக்கப்பட்டது. நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கையில், "வணிகங்களுக்கான அதிகாரப்பூர்வ தங்க முத்திரை மற்றும் அரசாங்க மற்றும் பலதரப்பு கணக்குகளுக்கு சாம்பல் நிற சரிபார்ப்பு அடையாளத்துடன், அதாவது க்ரே நிற டிக்  விரைவில் அறிமுகப்படுத்தப்படும்" என கூறப்பட்டிருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ட்விட்டர் தனது புதிய 'Blue for Business' சேவையையும் அறிவித்தது. இது வணிகங்களுக்கும் அவர்களின் கூட்டாளர்களுக்கும் மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் தங்களைச் சரிபார்த்து வேறுபடுத்துவதற்கான புதிய வழி. ட்விட்டர் தனது வணிக வலைப்பதிவு இடுகையில், வணிகத்திற்கான ப்ளூ டிக் சந்தாதாரராக, ஒரு நிறுவனம் அதனுடன் இணைந்த தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் பிராண்டுகளை அதன் கணக்கில் இணைக்க முடியும் என்று கூறியது. அவர்கள் அவ்வாறு செய்யும்போது, அந்தந்த ப்ரொபைல் விபரங்கள் அவர்களின் ப்ளூ அல்லது கோல்டன் நிற சரிபார்ப்பு அடையாளத்திற்கு அடுத்ததாக அவர்களின் தாய் நிறுவனத்தின் சுயவிவரப் படத்துடன் ஒரு சிறிய பேட்ஜைப் பெறும். மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் வணிகங்கள் தங்கள் சொந்த நிறுவனங்களுக்குள்ளேயே நெட்வொர்க் செய்ய இந்த இணைப்பு உதவும்.


மேலும் படிக்க | எலான் மஸ்க் ராஜினாமா ? - ட்விட்டர் வாக்கெடுப்பை சம்மதிப்பாரா... சமாளிப்பாரா...


தாய் நிறுவனம் வழங்கிய பட்டியலின் அடிப்படையில், ஒவ்வொரு துணை நிறுவனமும் சரிபார்க்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அவர்களின் தாய் நிறுவனங்களின் கணக்குடன் இணைக்கப்படும். வணிகங்கள் ட்விட்டரின் டிஎன்ஏவில் தாங்கள் தொடர்பு கொள்ளும் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் பிராண்டுகளை இணைப்பதற்கு சிறந்த அம்சம் என நிறுவனம் கூறியது. மேலும் "எதிர்காலத்தில், வணிகங்கள் மற்றும் அவர்களின் கூட்டாளர்களுக்கு Twitter மூலம் மேலும் பல சேவைகளை வழங்கி உதவ நாங்கள்  திட்டமிட்டுள்ளோம். மைக்ரோ-பிளாக்கிங் தளமானது வணிகத்திற்கான ப்ளூ ஃபார் பிசினஸ் குழுவைத் தேர்ந்தெடுத்துள்ளது" என ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. 


மேலும் படிக்க | சொத்து வரி தண்ணீர் வரி ரூ.1 கோடி செலுத்தக்கோரி தாஜ்மஹாலுக்கு நோட்டீஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ