இத்தாலியிலிருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலங்கானா வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் முதல் வழக்கு பதிவாகிய சில வாரங்களுக்குப் பிறகு, இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் வழக்குகளை ஐந்தாகக் கண்டறிந்துள்ளது. 



சீனாவின் ஊஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது ஐரோப்பியா மற்றும் அமெரிக்க கண்ட நாடுகள் வரை பரவியுள்ளது. சீனா மற்றும் உலக நாடுகளில் தற்போது வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


இந்த நிலையில், மேலும் 2 பேர் வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கும், தெலங்கானவை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.