கோவா: ATM இயந்திரத்தில் பணம் திருட முயன்றதாக இரண்டு ரோமானிய நபர்கள் கைது செய்யப்பட்டுளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ATM இயந்திரத்தில் பிரத்தியேக கருவிப் பொருத்தி பணத்தை திருட முயன்றதாக ரோமன் நாட்டைச் சேர்ந்த இருவரை கோவா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


கோவாவின் மார்கோ பகுதியில் இருக்கும் தேசிய வங்கி ஒருன்றின் ATM-ல் பிரத்தியேக கருவியை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொருத்திக்கொண்டு இருக்கையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். இன்று விடியற்காலை நடைப்பெற்ற இச்சம்பவம் குறித்து மார்கோ காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த கைது நிகழ்ந்துள்ளது.


கைது செய்யப்பட்டவர்களின் பெயர் பால் டேனியல் வாசில்(35) மற்றும் காஸ்டான்ஸியோ கோப்போ(40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் மீது IPC பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


முதற்கட்ட விசாரணையில்., பயன்படுத்தப்பட்ட கருவியானது, குறிப்பிட்ட ATM நிலையத்தில் பயன்படுத்தப்படும் ATM அட்டைகளின் தகவல்களையும், பரிவர்த்தனை தகவல்கள், ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்ளும் எனவும், பின்னர் இந்த தகவல்களை கொண்டு போலி அட்டைகள் தயாரிக்கப்பட்டு திருட்டு சம்பவத்தை நிகழ்த்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது!