Video: சாலை விதி மீறல்களை தடுக்க வந்துவிட்டது TyreKillers!
சலையில் தவறான பாதையில் செல்வோரின் வாகன டையரினை சிதைக்கும் இயந்திரம், இந்தியாவில் முதன்முறையாக பூனேவில் நடைமுறைக்கு வந்துள்ளது!
புனே: சலையில் தவறான பாதையில் செல்வோரின் வாகன டையரினை சிதைக்கும் இயந்திரம், இந்தியாவில் முதன்முறையாக பூனேவில் நடைமுறைக்கு வந்துள்ளது!
நகரங்களில் ஏற்படும் சாலை நெரிசல்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று வாகன ஓட்டிகள் தவறான பாதையில் பயணிக்க முயற்சித்து மற்ற பயணிகளுக்கான பாதையினை தடுப்பதே ஆகும்.
One Way எனப்படும் ஒரு வழிப் பாதைகளில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை செலுத்துவதினாலும், எச்சரிக்கை ஒளி விளக்கினை மீறு பயணம் மேற்கொள்வதாலும் சாலைகளில் பல விபத்துகள் நிகழ்வதினை நாம் பார்க்கின்றோம். இவ்வகையான அத்துமீறல்களை தடுப்பதற்காக சாலைகளில் Tyre Killers எனும் கருவி பயன்படுத்தப்படுகிறது.
Courtesy: RushLane
இந்த Tyre Killers-னால் சரியான பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை, மாறாக தவறான வழியில் பயணிக்க விரும்பும் பயணிகளின் வாகன டையர் வெடித்து சிதறும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் முதன்முறையாக புனேவில் இந்த Tyre Killers சாதனம் சாலையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்ந செயல்பாட்டிற்கு மக்களிடையை நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது!