உ.பி. மாநில அமைச்சரவையில் இருந்து சிவ்பால் யாதவ் உள்ளிட்ட 4 அமைச்சர்களை முதல்வர் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை நீக்கினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமாஜவாதி கட்சியில் இருந்து அகிலேஷ் யாதவின் ஆதரவாளர் ராம்கோபால் யாதவை அக்கட்சித் தலைவராக முலாயம் சிங் யாதவ் வெளியேற்றியுள்ளார். மேலும் சமாஜவாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர் சிங்கை மீண்டும் கட்சியில் சேர்த்ததற்கும் அகிலேஷ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அகிலேஷின் ஆதரவாளரான சட்டமேலவை உறுப்பினர் உதய்வீர் சிங் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 


உ.பி. சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அகிலேஷுக்கும், முலாயம் சிங்குக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்திருப்பதால், சமாஜவாதி கட்சியில் பிளவு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதற்காக கவலைப்படவில்லை. கட்சித் தலைமையை பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அதனாலேயே என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். மேலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முலாயம் சிங் தலைமையில் எதிர்கொள்வோம் என்று சிவ்பால் யாதவ் கூறியுள்ளார்.