முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் Uma Bharti-க்கு கொரோனா தொற்று!!
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதியின் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்துள்ளன.
போபால்: மத்திய பிரதேச (Madhya Pradesh) முன்னாள் முதல்வர் உமா பாரதியின் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்துள்ளன. உத்தராகண்ட் (Uttarakhand) மாநிலத்தில் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் இடையே அமைந்துள்ள வந்தே மாதரம் குஞ்சில் அவர் தனிமைப்படுத்தலில் உள்ளார்.
இந்த தகவலை உமா பாரதி தானே ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.
"மூன்று நாட்களாக எனக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி, எனது மலை பயணத்தின் கடைசி நாளில், ஒரு கொரோனா சோதனைக் குழுவை அழைத்து நான் கொரோனா சோதனை செய்து கொண்டேன். இமயமலையில், இங்கு, COVID-19-க்கான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, தனி மனித இடைவெளியை கடைபிடித்து வந்த போதிலும், எனது கொரோனா பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்துள்ளன.” என்று அவர் சனிக்கிழமை பிற்பகுதியில் உமா பாரதி (Uma Bharti) ட்வீட் செய்தார்.
ALSO READ: COVID-19 Update: உலக அளவில் கொரோனா பாதிப்பு விபரம்
"இப்போது நான் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் இடையே அமைந்துள்ள வந்தே மாதரம் குஞ்சில் இருக்கிறேன். இது எனது குடும்பத்தைப் போன்றது. நான்கு நாட்களுக்குப் பிறகு நான் மீண்டும் ஒரு சோதனைக்கு உட்படுத்தப்படுவேன். இதே நிலைமை தொடர்ந்தால் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பேன்." என்று அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய தொடர்பு கொண்ட அனைத்து நபர்களையும் கொரோனா வைரஸ் பரிசோதனை (Corona Test) செய்து கொள்ளும்படி உமா பாரதி கேட்டுக்கொண்டார்.
"யாரெல்லாம், எனது தொடர்பில் வந்தீர்களோ, அவர்கள் அனைவரும் கொரோனா சோதனைகளை செய்துகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.
ALSO READ: COVID காரணமாக மிகப் பெரிய முடிவை எடுத்தது இந்த மாநில அரசு!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR