இந்தியாவில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் தொடரும் என ஐ.நா எச்சரிக்கை
பாகிஸ்தான் வழியாக புதிய வெட்டுக்கிளிகள் படை இந்தியாவிற்குள் நுழையலாம் என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது
புதுடெல்லி: வட இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேதம், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில்ம் மீண்டும் வெட்டுக்கிளிகளின் அபாயம் அடுத்த 4 வாரங்களுக்கு இருப்பதாக ஐநாவின் உணவு பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, வட இந்தியாவில் பல மாநிலங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய வெட்டுக்கிளிகளின் கூட்டம் டெல்லியிலும் காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உடனடியாக டெல்லி அரசு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.
Read Also | ஜனசங்க நிறுவனர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளில் பிரதமர் அஞ்சலி
கொரோனாவுக்கு அடுத்து வெட்டுக்கிளிகள் என்பது தான் இன்று இந்தியாவில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராக இருக்கிறது. அரபு நாடுகள், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் பெருங்கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துவரும் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களால் இந்திய விவசாயிகள் கலங்கிப் போய் இருக்கின்றனர்.
கடந்த மூன்று தசாப்தங்களில் வெட்டுக்கிளிகளின் மிகப்பெரிய தாக்குதல் தற்போது நடைபெறுவது கவலைக்குரிய விஷயமாகும்.
ட்ரோன்கள், டிராக்டர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து இந்த வெட்டுக்கிளிகளை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Read Also | இந்தியா-பூட்டான் கோலோங்சு நீர் மின் திட்டம் ஒரு அலசல்...
இருப்பினும், இந்த வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டமானது இதுவரை 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களை சேதப்படுத்திவிட்டன.
இந்த வெட்டுக்கிளிகளின் பிரம்மாண்டமான கூட்டம் பாகிஸ்தானில் மாபெரும் அழிவை ஏற்படுத்திவிட்டு, ராஜஸ்தானுக்குள் நுழைந்து இந்தியாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தின.
ஆப்பிரிக்கக் காடுகளில் வறட்சியைத் தொடர்ந்து மழை பெய்து மண் ஈரமாகும்போது, இந்த ‘லோகஸ்ட்’வெட்டுக்கிளிகள் எண்ணிக்கையில் பல்கி கோடிக்கணக்கில் உற்பத்தியாகின்றன. ‘லோகஸ்ட்’ என்றழைக்கப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் அதிக தொலைவுக்கு புலம்பெயர்ந்து வலசை செல்லும் ஆற்றல் கொண்டவை. நாளொன்றுக்கு 150 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கக்கூடியவை.
Read Also | ராசிபலன்: இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும்
ஆப்பிரிக்கக் காடுகளிலும் பாலைவனங்களிலும் உற்பத்தியாகும் இந்த வெட்டுக்கிளிகள், கடலுக்கு மேலே 2,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் சக்தியுள்ளவை. ஆப்பிரிக்காவுக்கும் அரேபியத் தீபகற்பத்துக்கும் இடையே உள்ள செங்கடலைக் கடந்து ஆசியாவுக்குள் நுழைகின்றன.
தொடக்கத்தில் வண்டுகள் போல வளரும் இவை, இறக்கைகள் முளைத்தவுடன் கூட்டம் கூட்டமாகப் பறக்கத் தொடங்கிவிடுகின்றன. ‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் தனியாக இருந்தால் பிரச்சனை இல்லை. கூட்டமாகச் சேர்ந்தால் சிக்கல்தான். நம்மூரில் உற்பத்தியாகும் ஈசல்களைப் போல இந்த வெட்டுக்கிளிகள் பெருகிவிடும். இந்த நிலையில் மேலும் 4 வாரங்களுக்கு வெட்டுக்கிளிகளின் அபாயம் இருப்பதாக ஐ.நாவின் உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்திருப்பது விவசாயிகளுக்கு பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கிறது.