மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி திட்டங்களுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதால் பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பொருளாதாரத்தை மையமாக திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுமா? கார்ப்பரேட் வரி மற்றும் வருமான வரியில் ஏதாவது மாற்றம் செய்யப்படுமா? ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயத்திற்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் எந்த மாதிரியான பட்ஜெட் அறிவிக்கப்படும் போன்ற மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.


மேலும் இந்த வருடம் எட்டு மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அதை மனதில் வைத்து தான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.


சர்வதேச சுங்க நாளை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசியது:


நாட்டின் மறைமுக வரி முறையை ஜிஎஸ்டி முற்றிலும் மாற்றி விட்டது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மிகவும் குறுகிய காலகட்டத்தில் ஜிஎஸ்டி நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. 


எதிர்காலத்தில் அதன் தளத்தை விரிவுபடுத்தவும், கட்டமைப்பை ஒழுங்குபடுத்தவும் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் ஜிஎஸ்டி வரி வருங்காலத்தில் மேலும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. 


இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.