புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் 2022, ஜனவரி 31 முதல் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், மக்களவை மற்றும் மாநிலங்கள் அவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுவார். கடந்த சில ஆண்டுகளைப் போலவே, பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 11:00 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்படும்" என்று நாடாளுமன்ற விவகார அமைச்சகம் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி ஜனவரி 31, 2022 இல் தொடங்கி பிப்ரவரி 11, 2022 இல் முடிவடையும். இரண்டாம் கட்டம் மார்ச் 14, 2022 இல் தொடங்கி ஏப்ரல் 8, 2022 அன்று முடிவடையும். 2022,  மார்ச் 18 அன்று, ஹோலி பண்டிகையை முன்னிட்டு, அமர்வு இருக்காது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக 400க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


ALSO READ | அதிகரிக்கும் தொற்றின் எதிரொலி: தனியார் நிறுவன ஊழியர்கள் WFH செய்ய அரசு உத்தரவு


பட்ஜெட் 2022: பட்ஜெட் அமர்வு குறித்த முக்கிய தகவல்கள்


1. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதியமைச்சர் இரு அவைகளிலும் ‘வருடாந்திர நிதிநிலை அறிக்கை’ அல்லது பட்ஜெட்டை  தாக்கல் செய்கிறார்.


2. பிப்ரவரி 1, 2022 அன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.


3. வரவிருக்கும் நிதியாண்டில் அரசாங்கத்திற்கும் கிடைக்கும் வருவாய் மற்றும் செலவினங்களின் விரிவான கணக்கை பட்ஜெட் பட்டியலிடுகிறது.


4. பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர்  பட்ஜெட்டில் உள்ள முக்கியமான விஷயங்களை  அறிவிப்பார்.


5. பட்ஜெட் ஆவணம்  முழுவதையும் பார்த்தால் ஆயிரம் பக்கங்கள் வரை இருக்கலாம்.


6. மக்களவைக்கு பிறகு, மாநிலங்கள் அவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.


7. நடாளுமன்றட்தின் இரு அவைகளிலும் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற வேண்டும் என்பது அரசின் கடமையாக கருதப்படுகிறது.



8. இந்த அமர்வின் போது, ​​பல்வேறு அமைச்சகங்களின் மானியக் கோரிக்கைகள் குறித்தும், பல்வேறு நிலைக்குழுக்கள் விவாதித்து விவாதிக்கும். இது குறித்து இரு அவைகளிலும் தெரிவிக்கப்படும்.


9. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 112வது பிரிவின் கீழ் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.


10. 2016ம் ஆண்டுக்கு முன், பிப்ரவரி கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்த வழக்கத்தை மாற்றினார்.


11. முன்னதாக, ரயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அது பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.


12. இந்தியாவின் முதல் பட்ஜெட் பிப்ரவரி 18, 1860 அன்று ஜேம்ஸ் வில்சனால் தாக்கல் செய்யப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR