பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தை விசாரிப்பது யார்? உச்ச நீதிமன்றம் முடிவு

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு மீறல் குறித்த விசாரணை தொடர்பாக உச்சநீதிமன்றம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 10, 2022, 01:28 PM IST
  • பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு குறைபாடு விவகாரம்
  • உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்
  • ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிமதி தலைமையில் குழு
பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தை விசாரிப்பது யார்? உச்ச நீதிமன்றம் முடிவு title=

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு மீறல் குறித்த விசாரணை தொடர்பாக உச்சநீதிமன்றம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி மத்திய மற்றும் மாநில அரசுகளின் விசாரணைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், பிரதமரின் பயணத்தின் பாதுகாப்பு குறைபாடு எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிய வேண்டியது அவசியம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

கடந்த வாரம் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூருக்கு பிரதமர் சென்றபோது ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் பலத்த சர்ச்சைகளையும் கவலைகளையும் ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக இன்று அறிவுறுத்தல்களை வெளியிட்ட உச்ச நீதிமன்ற நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற ஒருவரின் தலைமையில் சுதந்திரமாக செயல்படும் குழுவை அமைக்க வேண்டும் என்று இந்த விவகாரத்தின் விசாரணை தொடர்பாக தெளிவிபடுத்தியது.

எனவே, பஞ்சாப் மாநில அரசும், மத்திய அரசும் நியமித்த விசாரணைக் குழுக்கள், பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட குளறுபடி விவகாரத்தை விசாரிக்காது.

பிரதமர் நரேந்திர மோதி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள சாலை மார்க்கமாக சென்றபோது  15-20 நிமிடங்கள் மேம்பாலத்தில் பிரதமர் மோடி சிக்கிக் கொண்டார்.

ALSO READ | பிரதமர் மோடி மீண்டும் பஞ்சாப் வருவார்: பஞ்சாப் முதலமைச்சர்

பிரதமர் சென்ற பாதையை போராட்டக்காரர்கள் வழிமறித்து சாலை மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. இது கடுமையான பாதுகாப்புக் குறைபாடு என்று கூறப்படுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி பயணித்த ஃபெரோஸ்பூர்-மோகா தேசிய நெடுஞ்சாலையை மறித்த அடையாளம் தெரியாத நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது, ஃபெரோஸ்பூர் காவல்துறையினர் (Punjab Police) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர்கள்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தநிலையில், பாரதி கிசான் யூனியன் அமைப்பின் கிராந்திகாரி பிரிவினர், பிரதமரின் வாகனப் பயணத்தைத் தடுத்து நிறுத்தியதற்குப் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த விசாரணைக் குழு தொடர்பான அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.

ALSO READ | பாதுகாப்பில் பெரிய குறைபாடு! பிரதமர் சென்ற வழியை மறித்த போராட்டக்காரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News