மருத்துவ கருக்கலைப்பு சட்டம் (திருத்தம்) மசோதா, 2020 க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கருக்கலைப்பு தொடர்பான சட்டம் அமலில் உள்ளது. இதில் தற்போது திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி,  ஒரு கர்ப்பத்தை கலைப்பதற்கான கால வரம்பு  20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக உயர்த்தப்படுகிறது.


கருக்கலைப்பு (Abortion) என்பது முளையம் (embryo) அல்லது முதிர்கரு (fetus) கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்கு வெளியே இருக்கும்போது உயிர்வாழக் கூடிய தன்மையை அடைவதற்கு முன்னர், அதனை கருப்பையிலிருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். 


கற்பழிப்பு மூலம் உருவானது மற்றும் இயல்புக்கு மாறான வளர்ச்சி கொண்ட கரு போன்றவை 20 வாரத்துக்கும் மேற்பட்ட வளர்ச்சி கொண்டிருந்தாலும் அவற்றை கலைக்க அனுமதி அளிப்பது தொடர்பாக மேற்படி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கர்நாடகாவைச் சேர்ந்த அனுஷா ரவீந்திரா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து மேற்படி நிரந்தர வழிமுறைகளை உருவாக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் அறிவுறுத்தி உள்ளது.


எனினும் இந்த விவகாரத்தில் இந்திய கருக்கலைப்பு சட்டம் 1971 ல் திருத்தம் மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.  மேலும் கரு கலைப்பதற்கான கால அவகாசம்  20 வாரம் என்பதை மேலும் உயர்த்தவும் பலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது.


இந்த நிலையில் தற்போதமத்தியஅமைச்சரவை கூட்டத்தில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி,  ஒரு கர்ப்பத்தை கலைப்பதற்கான கால வரம்பு  20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக உயர்த்தப்படுகிறது. இந்த மசோதா, வர உள்ள பட்ஜெட் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.