விமான போக்குவரத்து என்பது தற்போது நடுத்தர மக்களும் அதிக  பயன்படுத்தும் போக்குவரத்தாக மாறி விட்டது. இந்நிலையில், மலிவான விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கான வழியை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார். ராஜ்யசபாவில் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், சீசனை பொறுத்து விமான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றும்,  பயணிகள் திட்டமிட்டு, அதிக விலையில் இருக்கும் சீசன் காலத்தை கணக்கிட்டு முன்பதிவு செய்து குறைந்த விலையில் டிக்கெட் வாங்கலாம் என்றார். மாநிலங்கள் அவையில் கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்விகளுக்கு பதிலளித்த சிந்தியா, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட துறை என்றும், விமான நிறுவனங்களைச் சார்ந்திருப்பதால், பாதை விரிவாக்கத்தில் அரசுக்குக் கட்டுப்பாடு இல்லை என்றும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பண்டிகைக் காலத்தில் விமானப் பயணச்சீட்டுகளின் விலையை அதிகரிப்பது குறித்த கேள்விக்கு, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை என்பது சீசன் போது கிடைக்கும் வருமானத்தை சார்ந்திருக்கும் தொழில் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று அமைச்சர் கூறினார். அதன் தேவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது என்றார். விழாக்காலம் அக்டோபரில் தொடங்கும் என்றும், பிப்ரவரி வரை சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் தேவை அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார். பின்னர் சிறிது குறைகிறது எனக் கூறிய அவர், பருவமழை காலத்தில் தேவை குறைகிறது என்றார். கோவிட் தொற்று நோய்களின் போது, ​​​​இந்தத் துறையானது உலகின் எந்தவொரு தொழிற்துறைக்கும் இல்லாத வகையில் மிக மோசமான கட்டத்தை கடந்து சென்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.


டிக்கெட் விலையில் விமானத்திற்கான எரிபொருள் (மிக முக்கியமான அங்கம் என்றும், அதற்கான செலவு சுமார் 50 சதவீதம் என்றும் அவர் கூறினார். கோவிட்க்கு முன், ஒரு கிலோ லிட்டர் ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை இருந்த விலை, தற்போது கிலோ லிட்டர் ரூ.1,17,000 ஆக உயர்ந்துள்ளது என்றார். அமிர்தசரஸ் மற்றும் சண்டிகரில் பிரிட்டன், கத்தார், துபாய், மலேசியா, ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் இத்தாலி ஆகிய ஏழு நாடுகளுடன் சர்வதேச 'இணைப்பு' உள்ளது என்று அவர் கூறினார்.


மேலும் படிக்க | 13 ஆண்டு வரவு செலவை வெளியிடுகிறேன் - வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி


அங்கிருந்து வாரத்திற்கு 17 விமானங்கள் வருவதாக அமிர்தசரஸ் பற்றி கூறினார். விமான சேவை போக்குவரத்து ஒப்பந்தங்களில், இந்தியாவில் உள்ள ஆறு பெருநகரங்களுக்கு மட்டுமே நாங்கள் இணைப்பை வழங்குகிறோம் என்று சிந்தியா கூறினார்.  மாஎலும், ‘அவர்களுக்காக எங்கள் நாட்டை திறக்க முடியாது. இந்திய விமான நிறுவனங்களையும் வலுப்படுத்த வேண்டும். சுயசார்பு என்பது இந்தியாவின் கருத்து. இப்போது இந்திய விமான நிறுவனங்கள் பெரிய விமானங்களைப் பெறுகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்... நேரடி இணைப்பின் அடிப்படையில் நமது இந்தியக் கொடியை உலகம் முழுவதும் ஏற்றப் போகிறோம்’ என்றார்.


மேலும் படிக்க | சமூகநீதி பேசும் திமுக பட்டியலினத்தவரை துணை முதலமைச்சராக்குமா? சீறும் வானதி சீனிவாசன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ