Budget 2024: இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு... ரயில்வே துறைக்கு என்னென்ன பலன்கள்?
Railyway Budget 2024: மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரயில்வே துறை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையில் குறிப்பிட்டவை குறித்த முக்கிய புள்ளிகளை இதில் காணலாம்.
Railyway Budget 2024: 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் ரயில்வே துறையின் கீழ் மூன்று முக்கிய ரயில்வே பொருளாதார வழிதட திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதாவது, எரிசக்தி, கனிமம், சிமெண்ட் வழித்தடங்கள், துறைமுக இணைப்பு வழித்தடங்கள், அதிக போக்குவரத்துள்ள வழிதடங்கள் ஆகிய மூன்று ரயில்வே வழித்தடத் திட்டத்தை பிரதமர் மோடி தலைமயிலான அரசு செயல்படுத்தும் என இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
பல வகையிலான இணைப்பை செயல்படுத்துவதற்காக பிரதமர் கதி சக்தியின் கீழ் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அவை தளவாடங்களை கையாளும் செயல்திறனை மேம்படுத்தி செலவைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ரயில்வே பட்ஜெட், ஒன்றிய பட்ஜெட்டில் இணைக்கப்பட்டது ஏன்?
வந்தே பாரத் பெட்டிகள்
ரயில் இணைப்பு மற்றும் பயணிகள் வசதியை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தும் என்றும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் உறுதி அளித்தார். சுமார் 40 ஆயிரம் எண்ணிக்கையிலான சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் பெட்டிகளின் தரத்திற்கு உருமாற்றப்படும் என்றும் அறிவித்தார். மேலும், பயணிகள் பாதுகாப்பாகும், வசதியாகும், சொகுசாகவும் பயணிக்கும் வகையில் ரயில்வே சேவையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
மேலும், இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் அனைத்தையும் அறிவிக்க முடியாது என்றும் அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரை நாட்டை வழிநடத்த இந்த இடைக்கால பட்ஜெட் உதவும் எனவும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தேர்தலுக்கு பின் வரும் ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசே மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ