புதுதில்லி : கொரோனா மரணங்களுக்கான இழப்பீட்டுத்தொகையை ஒன்றிய அரசே அளித்திட வேண்டும் என்றும், அதனை மாநில அரசுகளுக்குத் தள்ளிவிடக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 


ஒன்றிய அரசு, கொரோனா தொற்றால் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத்தொகையாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என தேசியப் பேரிடர் மேலாண்மை அதிகாரக்குழுமம் (National Disaster Management Authority) பரிந்துரைத்திருப்பதாக உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்திருக்கிறது. எனினும் இந்தத் தொகை மாநில அரசாங்கங்களால் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF-State Disaster Relief Fund) வழங்கப்பட வேண்டும். 


ALSO READ : ஆட்கொல்லியான புலி : அச்சத்தில் மக்கள்


கொரோனா மரணங்களுக்கான இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும் என மாநில அரசாங்கங்கள் மீது சுமையை ஏற்றுவது முறையல்ல. மாநிலப் பேரிடர் நிவாரண நிதி என்பது கொரோனா தொற்றை சமாளிப்பது உட்பட அனைத்து வகையான பேரிடர்கள் சம்பந்தப்பட்டதற்கும் செலவிடப்பட வேண்டிய ஒன்றாகும்.மேலும் மாநில அரசாங்கங்கள் மிகவும் ஆழமான நிதி நெருக்கடிகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. 


கொரோனா தொற்றை சமாளிக்கும் பணி பிரதானமாக ஒன்றிய அரசின் முயற்சியாகும். இதற்கு மாநில அரசாங்கங்களும் உதவிடும். கொரோனா  தொற்றை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் ஒன்றிய அரசாங்கத்தின் அதிகாரிகள் மூலமாகவே வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. எனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கும் பிரதான பொறுப்பையும் ஒன்றிய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்னமும் தன் இறுதித்தீர்ப்பை வழங்கிட வில்லை. ஒன்றிய அரசின் பிரதானப் பொறுப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.


இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ALSO READ : Mega vaccination camp:செப்டம்பர் 26; தமிழகத்தில் 3வது மெகா தடுப்பூசி முகாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR