ஆட்கொல்லியான புலி : அச்சத்தில் மக்கள்

மனிதர்களை தாக்கும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தேவர் சோலை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2021, 02:32 PM IST
ஆட்கொல்லியான புலி : அச்சத்தில் மக்கள் title=

மனிதர்களை தாக்கும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தேவர் சோலை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் , தேவர் சோலை , தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற 52 வயதுடைய நபர் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வந்தார். இவர் வெள்ளியன்று காலை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது புதருக்குள் மறைந்திருந்த புலி திடீரென இவரை தாக்கியது. புலி தாக்கியதில் கழுத்து பகுதியில் படுகாயமடைந்த இவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் உடனடியாக புலியை துரத்தி சந்திரனை மீட்டனர்.

ALSO READ : செல்லப்பிராணி வளர்த்தால் ஊதியத்துடன் 2 நாள் விடுமுறை!

இதன் பின்னர் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை அனுமதித்துள்ளனர்.மேலும் சில தினங்களாகவே கூடலூர் சுற்றுப் புற பகுதிகளில் ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் நான்கு வளர்ப்பு கால்நடைகளை புலி அடித்து கொன்றுள்ளது.

எனவே இங்கு நடமாடும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்களை சமாதானம் செய்த வனத்துறையினர் புலியை கூண்டு வைத்து பிடிக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் கால்நடைகளை வேட்டையாடி வந்த புலியானது தற்போது மனிதர்களை தாக்கியுள்ளது.எனவே புலியை விரைந்து பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.!

ALSO READ : Cyclone Gulab: ஒடிசாவை நாளை தாக்கும் புதிய புயல் குலாப்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News