புது டெல்லி: கேரளா (Kerala) மற்றும் மகாராஷ்டிராவில் (Maharashtra) கொரோனா  வேகமாக பரவிவருவதால் பரவலை கட்டுப்படுத்துமாறு மற்றும் 5 தடுப்பு நடவடிக்கைகளை கையாளுமாறும் கேரளா மற்றும் மகாராஷ்டிரா அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 46 ஆயிரத்து 759 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஒட்டுமொத்தமாக 3,26,49,947 ஆக அதிகரித்துள்ளது. குழந்தை தொற்றில் இருந்து இதுவரை 31,374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


கொரோனாவிற்காக 3,59,775 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் மட்டும் 32,801 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1801 நபர்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து 18,503பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக கேரள அரசு கொரோனா தொற்று அதிகம் பரவாமல் இருப்பதற்கு ஞாயிறு அன்று முழு ஊரடங்கும் பிறப்பித்தது.


இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரளா மற்றும் மகாராஷ்டிரா அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை (Union government) செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.


அக்கடிதத்தில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கண்காணிக்க வேண்டும். பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கொரனோ (Corona) தடுப்பூசியை முழு வீச்சில் விரைந்து செலுத்திக் கொள்ள வேண்டும். இதுதவிர தனிமனித இடைவெளியையும் முக கவசம் (Face Mask) அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விரைந்து அதிகப்படுத்துமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQY