உதய்ப்பூர் படுகொலை : என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு
Udaipur Murder : ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் தையற்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார். இதனைத் தொடர்ந்து, டெல்லி பாஜக சமூக ஊடகப்பிரிவு தலைவராக இருந்த நவீன் ஜிந்தால் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து பின்னர் அப்பதிவுகளை நீக்கினார். இதற்குக் கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இவ்விவகாரத்தினால் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் இந்தியாவுக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், நுபுர் சர்மாவைக் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தும், நவீன் ஜிந்தாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முற்றிலும் நீக்கியும் பாஜக நடவடிக்கை எடுத்தது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் கன்னையா லால் என்ற தையற்கடைக்காரர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது கடைக்குத் துணி தைக்க வந்தது போல் நுழைந்த இரு இளைஞர்கள் கன்னையா லாலின் தலையைத் துண்டித்துக் கொலை செய்தனர்.
மேலும் படிக்க | நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தவர் தலை துண்டித்துக் கொலை : ராஜஸ்தானில் பதற்றம்
கன்னையா லாலை படுகொலை செய்ததாக ரியாஸ் மற்றும் கவுஸ் முகமது ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அவர்களை ராஜ்மந்த் என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர். உதய்ப்பூரில் பதற்றம் நிலவுவதால் அங்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் உதய்ப்பூரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கைதான இருவர் மீதும் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளதால் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து என்ஐஏ குழு உதய்ப்பூர் சென்றுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
மேலும் படிக்க | ”பாரத மாதா தூக்கில் தொங்க வேண்டும்” - பம்முகிறதா பா.ஜ.க?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR