”பாரத மாதா தூக்கில் தொங்க வேண்டும்” - பம்முகிறதா பா.ஜ.க?

இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என கத்தார் நாடு வலியுறுத்தியுள்ளது. சிறிய நாடு இப்படி மிரட்டுவதா என பாஜக தலைவரே கேள்வி எழுப்பியுள்ளார்.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Jun 6, 2022, 01:17 PM IST
  • ”பாரத மாதா தூக்கில் தொங்க வேண்டும்”
  • இந்தியாவை மிரட்டுகிறதா கத்தார்?
  • இந்த நாடுகளிடம் பம்மியது இந்தியா?
”பாரத மாதா தூக்கில் தொங்க வேண்டும்” - பம்முகிறதா பா.ஜ.க? title=

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபி பற்றி அவதூறாக பேசிய விவகாரம் பல நாடுகளில் இருந்து கண்டனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் இந்தியாவை ஆளும் கட்சி இப்படி மதரீதியாக பேசுவதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஓமன் அரசர், இப்படியான பேச்சு அரபு நாடுகளில் இருக்கக் கூடிய இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போர் என குறிப்பிட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கண்டனக் குரல்கள் வந்து கொண்டிருப்பதால் பாரதிய ஜனதா கட்சி எதிர்வினை ஆற்றியுள்ளது. பா.ஜ.க.-வின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அக்கட்சி அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

BJP Statement

மேலும் படிக்க | அரபு நாடுகளின் அழுத்தம்; சாட்டையை சுழற்றிய பாஜக

மேலும் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது பாரதிய ஜனதா கட்சி. இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்கவில்லை. பல நாடுகளில் இந்திய தூதர்கள் அழைக்கப்பட்டு எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உலகம் முழுவதிலும் பா.ஜ.க.-விற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதை அரிய முடிகிறது. இந்திய அரசு வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கோரியுள்ளது.

மேலும் படிக்க | எருமைக்கு டிஎன்ஏ சோதனை செய்த உரிமையாளர்! காரணம் என்ன தெரியுமா?

இது தொடர்பாக டிவீட் செய்துள்ள பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சுப்ரமணிய சாமி, இந்தியாவின் இப்படியான வெளியுரவுக் கொள்கைகளைப் பார்த்து ”பாரத மாதா தூக்கில் தொடங்க வேண்டும்” என்று எழுதியிருக்கிறார். “மோடியின் ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் சீனா, ரஷ்யா, அமெரிக்க நாடுகளிடம் இந்தியா மண்டியிட்டது. தற்போது கத்தாரிடமும் சத்சங்கம் நடத்திக் கொண்டிருக்கிறது” என சுப்ரமணியசாமி பதிவிட்டுள்ளார்.

 

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News