குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் போபால் மற்றும் குமா பகுதிகளுக்கான குடிநீர் வழங்கல் திட்டத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் தனது தொகுதி நிதியின் கீழ் 210கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு அந்த நலத்திட்ட விழாவில் பேசிய அமித் ஷா, “இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. குடிநீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 70 ஆயிரம் வீடுகளுக்கு சுத்தமான நர்மதா குடிநீர் உறுதி செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி, சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேசபக்தி உணர்வை வளர்ப்பதற்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


தெரிந்த மற்றும் அறியப்படாத நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்வதற்கும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஆகஸ்ட் 15ஆம் தேதிவரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். 


மேலும் படிக்க | குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு: WHO


தபால் அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள், மாநகராட்சிகள் மற்றும் இ-காமர்ஸ் இணையதளங்களில் தேசியக் கொடிகள் கிடைக்கும். பொதுமக்கள் மூவர்ணக் கொடியை உயர்த்தி அதனுடன் செல்ஃபி எடுத்து மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஆகஸ்ட் 13 முதல் 15 வரையிலான மூன்று நாள்  பரப்புரையின்போது நாடு முழுவதும் 20 கோடி மூவர்ணக் கொடிகள் ஏற்றப்படும்” என்றார்.


மேலும் படிக்க | அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை பாராட்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ