புதுடில்லி: உலகில் காற்று மாசு அதிகம் கொண்ட நகரங்களில் டெல்லி தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ராஜஸ்தான், அரியான போன்ற மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க்கழிவுகளால், டெல்லியில் உள்ள குப்பைகளை ஏரிப்பதாலும் டெல்லியில் கடுமையான மாசை ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் மட்டும் ஆண்டுதோறும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் 7 அம்சங்கள் கொண்ட திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் ஒன்று தான் வாகன கட்டுப்பாடு திட்டம். இந்த திட்டத்தின் படி, ஒற்றை இலக்க தேதிகளில் ஒற்றை இலக்க எண் கொண்ட கார்களும், இரட்டை இலக்க தேதிகளில் இரட்டை இலக்க எண் கொண்ட கார்களும் மட்டும் சாலைகளில் அனுமதிக்கப்படும் என்பதாகும்.


இந்த திட்டம் வரும் நவம்பர் 4 முதல் 15 வரை செயல்படுத்தப்படும். அதாவது, தீபாவளிக்குப் பிறகு இந்த முறை தொடங்கப்படும் எனக்கூறப்பட்டு உள்ளது.


இந்தநிலையில், இந்த திட்டத்தை குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், என்னை பொறுத்த வரை வாகன கட்டுப்பாடு திட்டம் தேவையில்லாது ஒன்று. இதன் மூலம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் (மோடி அரசு) அமைத்துள்ள ரிங் சாலைகள் மூலம் நகரத்தில் மாசுபாட்டு கணிசமாகக் குறைத்துள்ளது. மேலும் டெல்லியை குறித்து எங்கள் அரசு திட்டமிட்டுள்ள திட்டங்கள் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலைநகரம் மாசுபாட்டிலிருந்து விடுவிக்கப்படும் எனக் கூறினார்.